ஆளுநர் அப்பட்டமான அடாவடித்தனமான அரசியல் செய்வதற்கு அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்க வில்லை. இந்தப் பசப்பு பொய் புனை சுருட்டு வார்த்தையெல்லாம் அய்யாவழி மக்களிடம் எடுபடாது. அய்யா படைத்த அகிலத் திரட்டு ஏட்டில் அடிப்படை கொள்கையை 6 ஆண்டுகள் தவம் (தவசு ) இருக்கும் படி நாராயணர் அய்யாவுக்கு கட்டளை இட்டதாக வருகிறது. முதல் இரண்டு ஆண்டு கலியுகத்தை அழித்து தர்மயுகம் படைக்க மன்னரின் மற்றும் ஆதிக்க சாதிகளின் சர்வாதிகார கலியுகத்தை ஒழித்து சமதர்ம யுகம் காண்பதற்கு) அடுத்த 2 ஆண்டு தவசு சாதியை ஒழிப்பதற்கு. (பிராமணியத்தை எதிர்த்த சமத்துவம் படைக்க) மூன்றாம் இரண்டு ஆண்டு தவசு பெண் விடுதலை அடைவதற்கு. சனாதனத்தில் இந்த நோக்கங்களா இருக்கின்றன?.
சாதி அடுக்கு கொண்ட நால்வர்ண சனாதனத்திற்கு எதிராக “தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தி விடுவதே லட்சியம் என்ற தத்துவ வெளிச்சம் சனாதனமா? மக்களை வாட்டி வதைக்க 200 வகையான வரிகளைப் போட்ட மன்னனின் கொடுமைகளை அகிலத்திரட்டு ஏட்டில் அம்பலப்படுத்தி மக்களை உத்வேகப்படுத்தியது சனாதனமா?
இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு “கொத்தைக் குறையாதே குறை மரைக்கால் வையாதே” அறுவடைக்கு கூலியான நெல்லைக் குறைக்காதே என்று அறைகூவல் விட்டது சனாதனமா ? மனிதர்களில் பாகுபாடு வேண்டும் என்று முன்வைத்த சனாதனத்தை நொறுக்கும் விதமாக அய்யாவின் கடைசி வார்த்தைகள்தான் பதிகளில் (அய்யாவுக்கு பணிவிடை செய்யும் ( வழிபாட்டிடம் ) அய்யாவழி மக்கள் உச்சரிக்கும் வழிபாட்டு வரிகள் “ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு ஒருவருக்கொருவர் நிரப்பாய் ( சமமாக) இருந்திடுங்கோ” சிந்தனையை விதைத்து விட்டுச் சமாதியானவர் அய்யா.
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
ஆன்மீக வழிமுறையில் மக்களை புளுப்பூச்சி போல் நLத்திய பிராமணிய சனாதனத்தை உதைத்து உடைத்து விரட்டியதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக் காட்டுகள் அகிலத் திரட்டு ஏட்டிலும் அருள் நூலிலும் எடுத்துச் சொல்ல முடியும்.”ஆயும் கலைத்தமிழும் அருகு போல் வளரும் ” என்ற அய்யாவின் அகிலத்திட்டு வரிகள் சனாதன சமஸ்கிருதத்தில் உண்டா?” என் மக்கள் சான்றோர்கள் (நாடார் இனப் பெண்கள்) இடுப்பில் எடுத்த குடம் ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா” என்று அய்யாவின் சாட்டு நீட்டோலை பாடுகிறது. பெண்கள் தலையில் குடம் சுமந்தால் ஆதிக்க சாதிக்காரர்கள் பெண்களின் அங்கத்தை ரசிக்கும் கொடுமையை அம்பலப்படுத்துகிறார்.
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
“பூமக்கள் நீதமுடன் போட்ட தோள் சேலை தன்னை போடாதே என்றடித்தான் சிவனே அய்யா” என்று பெண்கள் மார்புச் சேலை அணிவதைத் தடுத்த கொடுமையை சாட்டு நீட்டோலையில் சாடுகிறார் அய்யா. ஒரு வரி கூட அய்யாவின் நூல்களில் படிக்காமல் திமிர்த்தனமாக ஆளுநர் ரவியும் அண்ணாமலையும் ஆதிக்க கட்டுக்கதைகளை அள்ளி விடுவதை அன்புக்கொடி மக்களாகிய அய்யாவழி மக்கள் சகித்துக் கொள்வார்களா?
பேராசிரியர் முனைவர் க. கணேசன் கொட்டாரம், கன்னியாகுமரி
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending