துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!
துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!
திருச்சி மாவட்டம், துறையூரில் திருச்சி ரோட்டில் பிரபல ஜவுளி நிறுவனமான மேக்னா சில்க் ஸ் ஜவுளிக்கடை முசிறி மற்றும் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் ஆகிய மூன்று ஊர்களில் செயல்பட்டு வருகிறது. துறையூர் மேக்னா சில்க் ஸ் ஜவுளி கடையானது இன்று வழக்கம் போல் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. இக்கடையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென இன்று காலை 10 மணிக்கு ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துறையூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் இந்தக் கடையானது வணிக நிறுவனத்திற்குரிய விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை எனவும், போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக கடை முன்பாக இரு சக்கர வாகனங்கள் , ஆட்டோக்.கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வருவதாலும், உணவகம் போலவே சாலைப்பகுதியை ஆக்ரமித்து வருவதால், கடை முன்பு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், மேக்னா சில்க் ஸ்- ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
எப்போது பரபரப்புடன் காணப்படும் ஜவுளிக்கடையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு கடையின் உள்ளே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டதை பரவலாக காண முடிந்தது. இதேபோல் முசிறி, பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் உள்ள கிளை நிறுவனமான மேக்னா சில்க் ஸ் ஜவுளிக்கடைகளிலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்