வேட்டையனுடன் மோத வருகிறது ‘பிளாக்’ திரைப்படம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படம் அக்-11ல் வெளியாகிறது. அக். 10-ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ ரிலீஸாகிறது.

கடந்த பல வருடங்களாக தரமான படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஜீவா– பிரியா பவானி சங்கர் காம்பினேஷனில்’பிளாக்’ படத்தை தயாரித்துள்ளது.

Srirangam MLA palaniyandi birthday

பிரமிப்பூட்டும் டிரைலர் ஏற்கனவே வர்த்தக ரீதியாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சோஷியல் மீடியாக்களில்  பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியின் தனித்துவமான கதைக்கரு விநியோகஸ்தர்களை ஏற்கனவே உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

எனவே பிரபல விநியோகஸ்தரான சுப்பையா சண்முகத்தின் SSI புரொடக்சன் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

பாலசுப்ரமணியின் மனதிற்குள் உருவான இந்த தனித்துவமான கதைக்கு ஒளிப்பதிவு கோகுல் பினாய் , எடிட்டிங் பிலோமின் ராஜ், இசை சாம் சி.எஸ்.

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ என எபோதுமே வலுவான கதையை மட்டுமே நம்பி படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘பிளாக்’ படமும் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என உறுதியாக நம்புகின்றது.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.