மீசைக்கார அமைச்சர் மகனுக்கு வந்த மீசை ஆசை..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மீசைக்கார அமைச்சர் மகனுக்கு வந்த மீசை ஆசை..!

திமுகவில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாது ஒன்று. மு.க.ஸ்டாலின் முதல் திமுகவின் மூத்த தலைவர்கள் எனஅனைவரின் வாரிசுகளும் தற்போது பதவி அதிகாரத்துடன் வலம் வருகின்றனர். ஆனால் திமுகவின் முதன்மை அமைச்சர் கே.என்.நேருவின் வாரிசு அருண் நேரு இது நாள் வரை எந்த பதவியும் இன்றி வலம் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது அவருக்குத் தான் மேயர் வேட்பாளர் வழங்கப்படும் என்று கூறி வந்தனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

ஆனால் அப்படி எது வும் நடக்கவில்லை. பின்னர் ராஜ்ய சபா எம்.பி. பதவி தருவார்கள் என்றார்கள். அருண் நேருவிற்கு பதவி ஏதும் கிடைத்தால் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களுக்கு எதிர்காலம் என்பதால் எப்படியாவது அருண் நேரு பதவி பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் வேண்டாத தெய்வமில்லை.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்நிலையில் அருண்நேருவிடம் உ.பி.க்கள், “அண்ணே.. உங்களுக்கு பிஞ்சு மூஞ்சிண்ணே! அமுல் பேபி மாதிரி இருக்கிற உங்கள பார்த்தா கெத்தான அரசியல்வாதி மாதிரி தெரிய லண்ணே..! அப்பா மாதிரியே நீங்க ளும் முரட்டு மீசை வச்சிக் கங்கண்ணே அப்ப தான் ரஃபா இருக்கும்.. பதவி கிடைக்கும். எம்.பி.யாகி நீங்க வேட்டி கட்டிகிட்டு டெல்லிக்கு போனா ஒரு கெத்தா இருக்கும்.. என உடன்பிறப்புகள் ஏத்திவிட்டதோடு நிற்காமல், ஒருபடி மேலே போன உ.பி.க்கள். அருண்நேருவின் புகைப்படத்தில் கிராபிக்கல் மீசை வரைந்து போஸ்டர் அடித்து அலப்பறை செய்து வருகிறார்கள்.

‘என்னடா இந்த மகனுக்கு வந்த சோதனை’ என்ற ரேஞ்சிக்கு சிந்தித்த அருண் நேரு மீசை வளர்ப்பதை முழுநேரப் பணியாக செய்து வருகிறாராம். தரிசு நிலத்தில் புல் வளர்ந்தது போல் வளர்ந்து வரும் மீசையை அடிக்கடி கண்ணாடி முன்நின்று பார்த்து ரசித்தும் வருகிறாராம்.!

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.