“இப்போதைய அவசியம் இந்த ‘ஹபீபி’  – இயக்குநர் மீரா கதிரவன்         

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஹபீபி’. அரபுச் சொல்லான ஹபீபிக்கு  தமிழில் ‘என்அன்பே’ என்று அர்த்தம். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகி சமூகவலைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன்  “இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்ப தான் சாத்தியமாகியிருக்கிறது.   நமது ஆரவாரமான பேச்சுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது.   மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்தப் படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல் கதை ஒன்றும் இருக்கு.

ஹபீபி
angusam.com – 14

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

படத்தைக் காணும் அனைவரும் தங்கள் வாழ்கையோடு  தொடர்புபடுத்தி பார்த்து தங்களையே பார்த்துக்கொள்ளக்கூடியதாக  இருக்கும்.   அந்தவகையில் சர்வதேச அளவில் வியாபார ரீதியாகவும்  இந்தப் படம் சென்று சேரும் என்பதால் இந்த படத்திற்கு ‘ஹபீபி’ என டைட்டில் வைத்துள்ளோம்.

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரிராஜா இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இது என்றே சொல்லலாம். அவரது திரையுலக பயணத்திலும் இது ஒரு முக்கிய படமாக இருக்கும்.

இயக்குநர் கதிரவன்இந்தப் படத்திற்காக கஸ்தூரிராஜாவை அணுகியபோது நான் முதலில் திரைக்கதையை படித்துப் பார்க்கிறேன் என்று கூறினார். இந்தக் கதை அவருக்கு பிடித்து போனதால் இதில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அறிமுக நாயகன் ஈஷா நடிக்க ‘ஜோ’ என்கிற படத்தின் மூலம் இளைஞர்களிடேயே பெரிதும் கொண்டாடப்பட்ட மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

மாநாடு, வணங்கான் படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை பார்த்துவிட்டு அவரே விருப்பப்பட்டு தனது வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் வெளியிட இருக்கிறார்” என்றார்.

தொழில்நுட்பக் குழு–

இசை ; சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசுவாமி

படத்தொகுப்பு ; ராஜா முகமது

கலை ; அப்புன்னி சாஜன்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

 

–மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.