அன்று செக்ஷன் 120B 4 வருட சிறை
சொத்துக் குவிப்பு வழக்கிற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைய அவருடைய தோழி சசிகலா உள்ளிட்ட 3 பேரும் தண்டனை காலத்தை பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அனுபவித்து, 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை விதிமுறைகளை மீறி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அந்த நேரத்தில் சிறையில் காவல் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி ரூபா என்பவர் சசிகலா மீது குற்றம் சாட்டினார். மேலும் சொகுசு வாழ்க்கைக்காக சசிகலா லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது. இது கடந்த கால செய்தி.
சிறையில் சொகுசு வாழ்க்கை
இந்நிலையில் தற்போது சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ லஞ்சம் கொடுத்ததாகவும், சிறை விதிமுறைகளை மீறியதாக தற்போது திடீர் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டு 127 / 2022 என்ற குற்றவியல் எண்ணில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரம் குற்றச்சாட்டு எழுந்த 2018ஆம் ஆண்டு 7 மாதம் தொடங்கப்பட்ட விசாரணை தற்போது தான் முடிந்ததாகவும், இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிறைத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், இரண்டாவது குற்றவாளியாக அடிஷனல் ஜெயில் சூப்பிரண்டு அனிதா, மூன்றாவது குற்றவாளியாக சிறை அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மற்றும் ஐந்தாவது குற்றவாளியாக சசிகலா சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆறாவது குற்றவாளியாக இளவரசியின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது..
இவர்கள் மீது ஐ.பி.சி 109, 465, 468, 471, 120 ஙி என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறது. இந்த வழக்கை நீதிபதி லட்சுமி நாராயணபட் விசாரிப்பார் என்றும் வழக்கு விசாரணை 11.3.2022 பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
சசிகலா மீது வழக்கு
பதிவு செய்ய காரணம்!
தற்போது செக்ஷன் 120B
சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் பணம் பெற்றதாக அன்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலர்கள் விசாரணையில் சத்தியநாராயணராவ் விளக்கம் அளித்ததால் அவர் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லையாம்.
அதேநேரம் சசிகலாவிடம் விசாரணை நடத்த பலமுறை அதிகாரிகள் சசிகலா பிஏ கார்த்திகை தொடர்பு கொண்டு முயற்சி செய்தும் சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்க முன்வரவில்லையாம். இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும் 120 ஙி பிரிவில் தான் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதே வழக்கு பிரிவு தற்போது சசிகலா மீது மீண்டும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சசிகலாவின் அரசியல் தலையீட்டை குறைக்கவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சசிகலா 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தன்னுடைய பிரச்சார பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவும், அவருடைய அரசியல் செயல்பாடுகளை சுருக்கவுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.
மேலும் அடுத்த மாதம் பெங்களுரில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
– எம்.வடிவேல்…. மெய்யறிவன்