ஸ்டண்ட் சீனில் டூப் போடாத புது ஹீரோயின்!-‘பரிசு’ அதிசயம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 ஸ்ரீ கலா கிரியேஷன்ஸ் சார்பில் கலா அல்லூரி டைரக்ட் பண்ணியுள்ள படம் ‘பரிசு’.

திரைப்படக் கல்லூரியில் பயின்றுள்ள இவர் இயக்கும் முதல் படம் இது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

படத்தில் ஐந்து பாடல்களையும் கே..ராஜேந்திரன் எம்.ஏ., எம்.பி.ஏ. எழுதியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் கலா அல்லூரி,

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

” ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான தந்தை தனது மகளிடம், மற்றவர்கள் போல் நீ டாக்டராக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என்று  கனவு காணவில்லை . நீ நம் நாட்டிற்குச் சேவை செய்யும் ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் என் கனவு என்கிறார் .

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் அதை நாட்டுக்காக செய்வது பெருமை என்று சிறுவயதிலேயே தனது மகளிடம் உணர்த்துகிறார் அந்தத் தந்தை. அப்பாவின் விருப்பப்படியே இராணுவத்தில் சேர்கிறாள் மகள் .ஒரு பெண்ணாகவும் ராணுவ வீரராகவும் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தடைகளையும் அவள் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறாள் என்பதைச் சொல்வது தான் இந்தப் படம். அதாவது அப்பாவுக்கு மகள் கொடுக்கும் பரிசு.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜான்விகா
ஜான்விகா

படத்தின் பிரதான பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார்.ஜான்விகாவுக்கு சினிமா மீது அபரிமித ஆர்வம். ஏராளமான முன் தயாரிப்புகளுடனுடம் ஈடுபாட்டுடனும்  நடித்ததுடன் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமலே அசத்தியுள்ளாராம்.. கல்லூரி மாணவி, விவசாயி,  ராணுவ வீராங்கனை,  என  மூன்று மாறுபட்ட தளங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி உள்ளார்.

மற்ற கதாபாத்திரங்களில் ஜெய் பாலா, கிரண் பிரதீப், நடித்துள்ளனர். மேலும் ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு, பேய் கிருஷ்ணன்,  ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு சங்கர் செல்வராஜ், இசை ராஜீஷ், எடிட்டிங் சி. எஸ். பிரேம்குமார், நடனம் சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் கோட்டி -இளங்கோ, பின்னணி இசை சி.வி. ஹமரா, பி.ஆர்.ஓ.சக்தி சரவணன்.

பரிசு
பரிசு

“பெண்களை காட்சிப் பொருளாகக் காட்டும் சினிமாவில் ஒரு பெண்ணை சாதனைப் பெண்ணாக்கி அப் பாத்திரத்தை பெருமையுடன் உயர்த்திப் பிடிக்கும் இந்தப் படம் நல்ல முயற்சி தான் என்பதைப் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் கலா அல்லூரி.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.