குளித்தலை பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி ! என்ன நடந்தது.. !
குளித்தலை பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி ! என்ன நடந்தது.. ! குளித்தலை அருகே கடவூரில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் தெளிப்பானை ( பிரேயர்) இயந்திரத்தினை உடைத்த போது வெடித்ததில், பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் பசும்பொன் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 49.
இவர் பழைய இரும்பு மற்றும் பழைய பொருட்கள் வாங்கும் கடையை கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கடையில் விற்பனைக்கு வரும் பழைய பொருட்களை வாங்கி அதனை உடைத்து சேகரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறார்.
28.07.2024 வழக்கம்போல கடையில் பழைய பூச்சி மருந்து தெளிக்கும் தெளிப்பான் (ஸ்பிரேயர்) ஒன்றை உடைத்து அதில் உள்ள மோட்டாரை எடுத்தபோது, மோட்டார் திடீர் என வெடித்தது.
வெடி சத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டுள்ளது. வீட்டில் இருந்த மனைவி மல்லேஸ்வரி மற்றும் குழந்தைகள் ஓடி வந்து பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி கால்கள் மற்றும் கைகள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.
சம்பவம் குறித்து, தோகமலை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.