புதிதாக திறந்த ரேஷன் கடையில் பெயரை எழுதி விளம்பரம் தேடிய சேர்மனை விரட்டிய பொதுமக்கள் !
புதிதாக திறந்த ரேஷன் கடையில் பெயரை எழுதி விளம்பரம் தேடிய சேர்மனுக்கு எதிராக திரண்ட பொதுமக்கள் !தர்மாபுரி ஊராட்சி மன்ற ஆவணங்களை கடந்த நான்கு மாதங்களாக எடுத்து வைத்துக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் நியாயவிலைக் கடையில் தன்னுடைய பெயரை எழுதி திறக்க வந்த திமுக சேர்மன் சக்கரவர்த்தியை பொது மக்கள் விரட்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேனி மாவட்டத்தில், தர்மாபுரி ஊராட்சி மன்ற ஆவணங்களை கடந்த நான்கு மாதங்களாக எடுத்து வைத்துக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் நியாயவிலைக் கடையில் தன்னுடைய பெயரை எழுதி திறக்க வந்த திமுக சேர்மன் சக்கரவர்த்தியை பொது மக்கள் விரட்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உடனடியாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பிரேம்குமார் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டது. தேனி ஊராட்சி ஒன்றியம் தர்மாபுரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை சுமார் 13.16 லட்சம் செலவில் கட்டப்பட்டது. புதிதாக நியாய விலை கடை கட்டி முடிக்கப்பட்டு பெயர் பலகையில் சேர்மன் சக்கரவர்த்தி பெயர் பொறிக்கப்பட்டது.
தர்மாபுரி ஊராட்சிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல், கடந்த நான்கு மாதங்களாக ஊராட்சி மன்ற ஆவணங்களை அனைத்தையும் எடுத்துச் சென்று சேர்மன் வைத்துக்கொண்டார்.
இதனால் நியாயவிலைக் கடையில், தன்னுடைய பெயரை எழுதி திறக்க வந்த திமுக சேர்மன் சக்கரவர்த்தியை பொது மக்கள் விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து நியாய விலைக் கடையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெயர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பிரேம்குமார் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டது.
தற்போது ஊர் பொதுமக்களுக்கும் சேர்மனை தகாத வார்த்தைகளில் பேசி விரட்டி அடித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருகிறது.
வீடியோ லிங்
ஜெய்ஸ்ரீராம்.