பட்டியலின பணியாளர்களை பழிவாங்கும் அண்ணாமலை பல்கலைகழகம் ? தமிழக அரசு தலையிட்டு சமூக நீதியை நிலை நாட்டுமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அநீதியை சமூக நீதியாக சொல்லும் காலம் –  1920 காலகட்டத்தில் பழமையான சிதம்பரம் நகரில் ஆறுமுக நாவலர், பச்சையப்பன், செட்டியார் என்ற பெயர்களில் மூன்று பள்ளிகள் பார்ப்பனர் அல்லாத குழந்தைகள் படிப்பதற்கு இயங்கி கொண்டியிருந்தது. அதேவேளையில், பார்ப்பனர் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட மேற்கண்ட பள்ளிகள் அனைத்திலும் பட்டியல் வகுப்பு குழந்தைகள் படிப்பதற்கு வாய்ப்புகள் மறுக்கபட்டன. அந்த நிலையை போக்குவதற்கு சுவாமி சகஜானந்தா நந்தனார் பெயரில் பட்டியல் குழந்தைகளின் கல்விக்காக ஒரு பள்ளியை உருவாக்கினார்.

சுவாமி சகஜானந்தா நந்தனார் பள்ளி
சுவாமி சகஜானந்தா நந்தனார் பள்ளி

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

சுவாமி தன் மக்களுக்காக பள்ளியுடன் இணைத்து ஒரு கல்லூரி தொடங்கவும் திட்டமிட்டிருந்தார். அதை செயல்படுத்துவதற்கு முதற்கட்ட பணி செய்து கொண்டு இருந்தபோது அதனை அறிந்த அண்ணாமலை செட்டியார் என்னுடைய மீனாட்சி கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுகிறேன். அதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள் அதற்கு ஈடாக SC/ST மாணவர்களுக்கு சலுகை தருகிறேன் என்றும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறேன், என்றும் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அண்ணாமலை செட்டியாருக்கு சுவாமி உதவி செய்தார்.

அண்ணாமலை செட்டியார்
அண்ணாமலை செட்டியார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சென்னை மாகாண சட்டமன்றத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேவை குறித்து சுவாமி பேசியதன் அடிப்படையிலேயே கல்லூரி பல்கலைக்கழகமாக உயர்வு பெற்றது. அதனடிப்படையிலே வாழ்நாள் முழுவதும் செனட் உறுப்பினராக இருந்தார். மேலும் எந்த பல்கலைகழகத்திலும் இல்லாத அளவிற்கு E-Card என்கிற நடைமுறை இருந்தது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பட்டியல் சமூகத்தனர் பயனடைந்தனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் புலவர் ஆறுமுகம்.
சுதந்திரப் போராட்ட வீரர் புலவர் ஆறுமுகம்.

மருத்துவ கல்லூரி தொடங்க ஏற்பட்ட இடப்பிரச்சினையின் போது புலவர் ஆறுமுகம் அவர்களின் உதவியை நிர்வாகம் நாடியது. நிலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து நிர்வாகத்திற்கு பெரும் உதவி செய்தார். இப்படி பட்டியல் சமூக தலைவர்களின் உழைப்பால் உருவானதே அண்ணாமலை பல்கலைகழகம்.

பட்டியல் சமூக தலைவர்கள் உழைப்பால் உருவானாலும் முறையான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தவில்லை. மாணவர்கள் சேர்க்கையில் பின்பற்றப்பட்ட இடஒதுக்கீடு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலை 90களின் பிற்பகுதியில் மாற தொடங்கியது. குறிப்பாக ஆசிரியர் அல்லாத பணியில் தலைவர் இளையபெருமாள், புலவர் ஆறுமுகம் போன்றவர்களின் அழுத்தத்தால் முதல் கட்டமாக விளாகம் வடிவேலு, அன்புகாந்தி மற்றும் டெல்லிமணிக்கும் எழுத்தர் பணி கிடைத்தது. அதன் பிறகே குறைவான எண்ணிக்கையில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு பணிகள் நிரப்பட்டன.

இப்படி தொடர் உழைப்பாலும் போராட்டங்களாலும் கிடைத்த குறைந்தபட்ச உரிமையும் காலி செய்யும் வகையில் தற்போது அரசு மற்றும் பல்கலைகழக நிர்வாகமும் நடந்துகொண்டு இருக்கிறது. நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் பல்கலைகழகத்தை 2013 செப்டம்பரில் அரசு தன் கட்டுப்பாட்டில் பல்கலைகழகத்தை எடுத்துகொண்டு நிர்வாகத்தை சரிசெய்ய தொடங்கியது. நிதி நெருக்கடியை சரி செய்ய பல வழி முறைகளை சிவதாஸ் மீனா I.A.S அரசுக்கு பரிந்துரை செய்தார்.

சிவ்தாஸ் மீனா I.A.S
சிவ்தாஸ் மீனா I.A.S

அவற்றில் முக்கியமானது கடலூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் செயல்படும் கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைகழகத்தோடு இணைப்பது, உறுப்பு கல்லூரிகளை உருவாக்குவது, பல்கலைகழக வருமானத்தை பெருக்க புதிய பாடபிரிவுகளை தொடங்குவது மற்றும் பணி நிரவல் போன்றவை, ஆனால் கடந்த 2014க்கு பிறகு பணி நிரவல் மட்டுமே அரசு செய்துள்ளது, இந்த பணி இடமாற்றத்தில் நிர்வாகம் பின்பற்றும் கொள்கை Last Come First Go என்கிற கொள்கை முடிவை எடுத்தது. இந்த கொள்கை முடிவால் அதிகம் பாதிக்கப்படுவது SC/ST பணியாளர்களே. காரணம் பல போராட்டங்களுக்கு பிறகு கடைசியாக அதாவது 90களின் பிற்பகுதியில் பணியில் சேர்ந்தவர்கள் பட்டியல் பிரிவை சார்ந்தவர்களே.

பொதுவாக பணி நிரவலுக்கு அரசு கடைபிடிக்கும் நடைமுறை பணியில் இருக்கும் நபர்களின் சாதி வாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்து அதைக்கடந்து கூடுதலாக வருபவர்களை பணியிடம் மாற்றம் செய்யும், ஆனால் அப்படி செய்யாமல் வெறுமனே Last Come First Go என்ற விதியை கொண்டு பல்கலைகழகம் நடைமுறைபடுத்தியது. இது பட்டியல் சமூக பணியாளர்களை திட்டமிட்டு வெளியேற்றும் நடைமுறையாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்போது SC/ST ஊழியர்கள் ஆசிரியர் பணியில் 4.7% ஆசிரியர் அல்லாத பணியில் 6% மட்டுமே உள்ளனர். மீண்டும் Redeployment செய்தால் SC/ST ஊழியர்களின் சதவீதம் வெறும் 2% ஆக குறைந்தது விடும். ஏற்கனவே தலித்களுக்கு இட ஒதுக்கீடு முழுமையாக நிரப்பாமல் இருக்கும்போது மறுபடியும் Redeployment செய்தால் SC/ST ஊழியர்களின் இடஒதுக்கீடு மேலும் கேள்விக்குறியாக அமையும்.

ADMK Vs DMK
ADMK Vs DMK

அதிமுக அரசு செய்த தவறை திமுக சரிசெய்யும் என்று பார்த்தால் அதை விட கூடுதலாக அப்பட்டமான விதிமீறலை திமுக அரசு செய்கிறது. இதற்கு காரணம் பல்கலைகழக அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் தவறான புள்ளி விவரங்கள் தான். அரசு மீண்டும் Redeployment செய்தால் வெறும் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே பணியில் இருப்பார்கள். இது மிக மோசமான முன்னுதாரணமாக மாறும் அதோடு பட்டியல் இன மக்களுக்கு கழக அரசு செய்யும் துரோகமாக அமையும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

துணைவேந்தர் கதிரேசன்
துணைவேந்தர் கதிரேசன்

துணைவேந்தர் கதிரேசனின் சாதிய உள்நோக்கம் கொண்ட தவறான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை, பல்கலைகழகத்தின் தவறான கொள்கை முடிவால் பாதிக்கபட்ட பேராசிரியார் ஒருவர் உயர்நீதிமன்றதில் வழக்கு தொடுத்தார். மனுதாரர் அண்ணாமலை பல்கலைகழகம் அரசு நிர்வாகத்திற்கு வந்தபிறகு இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் பணி நிரவலை செய்துள்ளது என்று வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு முறை பணி நிரவலில் பல்கலைகழகம் பின்பற்றாதது தவறு என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் பல்கலைகழக நிர்வாகம் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

சமுக நீதிக்கு எதிரான முடிவை எதிர்த்து சாதிய மனநிலையில் செயல்படும் துணைவேந்தர் தனக்கு ஆதரவு வேண்டும் என்பதற்கு ஒரு சில SC/ST பிரிவு பேராசியர்களுக்கு சில பதவிகளை கொடுத்து தனக்கு சாதகமாக வைத்துள்ளார். சமூகநீதியை தன்னுடைய உயிர் மூச்சாக கொண்ட திமுக அரசு இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக பல்கலைகழகம் மேல்முறையீடு செய்வதை வேடிக்கை பார்ப்பது வியப்பளிக்கிறது.

திருமா - சிந்தனை செல்வன்
திருமா – சிந்தனை செல்வன்

அண்ணாமலை பல்கலைகழகம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருக்கிறது, மேலும் இந்த பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பல்கலைகழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் இருவரும் பல்கலைகழகத்தின் நேரடி தொடர்பிலும் இருக்கிறார்கள். இந்த பிரச்சினை பற்றியும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் எந்த அறிக்கையும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்காலத்தில் பல்கலைகழக நிர்வாகத்தின் சீர்கேட்டை எதிர்த்து போராட்டம் நடத்தியது. குறிப்பாக துணைவேந்தர் அலுவலகத்தை மூடும் போராட்டம் போன்றவற்றை அறிவித்து செய்தும் காட்டியது. அப்படியான ஒரு வலுவான போராட்டத்தை கட்சி முன்னெடுத்தால் இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுதும் திராவிட அரசுகள் செய்யும், செய்த தவறுகள் சரி செய்யப்பட வாய்ப்பு உண்டு. இல்லையேல் SC/ST பிரிவு சமுகத்தவர்களின் பிரதிநிதித்துவம் இங்குபோல் அனைத்து இடங்களிலும் முற்றிலும் காணாமல் போய்விடும்.

அண்ணாமலை பல்கலைகழகம்
அண்ணாமலை பல்கலைகழகம்

மாபெரும் கட்சி முன்னெடுக்க வேண்டிய ஒரு பணியை ஒரு தனி நபரிடம் ஒப்படைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். பட்டியல் சமூக தலைவர்களின் உழைப்பால் உருவான ஒரு பல்கலைகழகத்தில் தலித் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவது சமூக நீதியாகுமா? சமூக நீதி அரசு என்று தங்களை தாங்களே முழங்கும் தமிழக அரசு தலையிட்டு சமூக நீதியை நிலை நாட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது அநீதியே சமூக நீதியாக சொல்லும் காலமாகிவிட்டது.

– அருள் முத்துக்குமரன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.