அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

500-க்கு மேல் 341 பேர் – 32 செண்டம் – அசத்திய மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழகத்தில் 17-வது சட்டமன்றத்தேர்தலுக்கான முடிவுகள் தெரிந்தும் ஆட்சி அமைப்பதில், நீண்ட இழுபறி ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழலுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8 இலட்சம் மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், 95.20 சதவீத தேர்ச்சியுடன் 4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை போல, இந்த முறையும் மாணவர்களை (93.19 சதவிகிதம்)  விட மாணவிகளே (97 சதவிகிதம்) தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தனர்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

மாநிலத்திலேயே 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும் , 98.05 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.63 சதவீதத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பின்னணியில், மதுரையில் செயல்பட்டு வரும் சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் தேர்ச்சியில் தனிச்சிறப்பான சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

600 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்களுடன் மாணவர் பிரணவ் முதலிடத்தையும்; 594 மதிப்பெண்களுடன் பிரஜேஸ் இரண்டாவது இடத்தையும்; 588 மதிப்பெண்களுடன் சேத்தன்னா மூன்றாமிடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி
மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இது தவிர, 76 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலான மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள். மேலும், 265 மாணவர்கள் 500 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள். இன்னும்சொல்லப்போனால், அனைத்துப் பாடங்களையும் சேர்த்து 32 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக கணிதத்தில் மட்டும் 13 பேர் செண்டம் எடுத்திருக்கிறார்கள். அதேபோல வேதியியலில் 12 பேரும் செண்டம் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள்.

பள்ளி அளவில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, இதன்வழியே மதுரை மாவட்டத்துக்கும் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தின்  பெருமையை பறைசாற்றும் விதமாகவும் கருத்துடன் படித்து சாதனைகளை புரிந்த மாணவர்களைப் பள்ளித் தலைவர் இராஜாகிளைமாக்சு பாராட்டினார்.

”மாநில அளவில் சாதனை பட்டியல் வெளியிடப்படுவது கைவிடப்பட்ட சூழ்நிலையிலும், சி.இ.ஓ.ஏ பள்ளி தனது மாணாக்கர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சிறப்பான திட்டத்துடன் அரசுப்பொதுத் தேர்வுக்குத் தயார் செய்ததன் பலனாக தொடர்ந்து இச்சாதனையை மாணவர்கள் நிகழ்த்திக்காட்டியிருப்பதாக” பெருமையோடு பதிவு செய்கிறார், பள்ளித் தலைவர் இராஜாகிளைமாக்சு.

மேலும், சாதனை மாணவர்களை பள்ளியின் இணைத் தலைவர் சாமி துணைத் தலைவர்கள் பள்ளி முதல்வர்கள் கலாமஞ்சுளா கோடீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.