சௌடாம்பிகா கல்விக் குழும மாணவா்களின் தொடர் சாதனைகள் !
மார்ச் – 2026ல் நடைபெற்ற +2 அரசுப் பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளைப் பாராட்டி சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் DR. S. இராமமூர்த்தி அவர்கள் இச்சாதனை குறித்துக் கூறியதாவது,
எமது பள்ளியில் பயின்ற V ரக்ஷனா என்னும் மாணவி அறிவியல் பாடப்பிரிவில் 596/600 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், S கோகுலப்பிரியன் என்னும் மாணவன் 595/600 பெற்று இரண்டாமிடமும், R மதுஸ்ரீ என்னும் மாணவி 593/600 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்று எம்பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் எமது பள்ளியில் பயின்ற மாணவர்களில் 590 க்கு மேல் 7 மாணவர்களும், 585 க்கு மேல் 27 மாணவர்களும், 580 க்கு மேல் 64 மாணவர்களும், 550 க்கு மேல் 410 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கணிதப் பாடத்தில் எடுக்கப்பட்டுள்ள 40 சென்டங்களில் 30ம், இயற்பியலில் 5இல் 2ம், வேதியியலில் 24ல் 18ம், உயிரியலில் 86 இல் 77ம், கணினி அறிவியலில் 282இல் 82ம் மற்ற பாடங்களில் 19 சென்டங்கள் உட்பட மொத்தம் 228 சென்டங்களை பெற்றுள்ளனர்.
மேலும் தமிழில் 51 மாணவர்களும், ஆங்கிலத்தில் 14 மாணவர்களும், கணிதத்தில் 72 மாணவர்களும், இயற்பியலில் 29 மாணவர்களும், வேதியியலில் 147 மாணவர்களும், உயிரியலில் 99 மாணவர்களும், கணினி அறிவியலில் 105 மாணவர்களும் மற்றும் பிற பாடங்களில் 45 மாணவர்களும் 100 க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பொறியியல் தர வரிசை பட்டியலில் 200 க்கு 199.5 ஒரு மாணவரும், 199 மற்றும் அதற்கு மேல் 6 பேரும், 198 மற்றும் அதற்கு மேல் 26 பேரும், 197 மற்றும் அதற்கு மேல் 38 பேரும், 196 மற்றும் அதற்கு மேல் 51 பேரும், 195 மற்றும் அதற்கு மேல் 70 பேரும் cut-off மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்வி இயக்குநர், முதல்வர்கள். துறைத் தலைவர்கள், ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் Dr. எஸ். இராமமூர்த்தி மற்றும் செயலாளர் ஆர். செந்தூர் செல்வன் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.