அங்குசம் சேனலில் இணைய

விமல் பட தயாரிப்பாளரின் பரிதாபம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

டந்த ஆகஸ்ட் 23—ஆம் தேதி, ‘வாழை’, போகுமிடம் வெகு தூரமில்லை’, ‘கொட்டுக்காளி’ என மூன்று படங்கள் ரிலீசாகின. இதில் ‘போ.இ.வெ.தூ.’ படத்தை தயாரித்தவர் சிவா கிலாரி என்பவர். ஆந்திராவைச் சேர்ந்த இவர் நியூஸிலாந்தில் பிஸ்னஸ் செய்து வருகிறார், தமிழும் நன்றாகப் பேசுவார். நியூஸிலாந்தின் அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் எம்.பி.தேர்தலில் போட்டியிட்டவர்.  கருணாஸ் மூலமாகத் தான் தமிழி சினிமாவிற்குள் வந்தார் சிவா. படத்தின் ஹீரோ விமலுக்கு 50 லட்சம், கருணாசுக்கு 40 லட்சம் சம்பளம். மற்ற நடிகர்—நடிகைகள், டெக்னீஷியன்கள் சம்பளம், படப்பிடிப்புச் செலவு என மொத்தம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘போகும் இடம் வெகு தூரமில்லை’ படத்தைத் தயாரித்தார் சிவா கிலாரி.

தமிழ்நாடு முழுவதும் 102 தியேட்டர்களில் ரிலீசானது படம். இதில் 4  தியேட்டர்களில் மட்டும் தான் நான்கு காட்சிகள். 29 தியேட்டர்களில் 2 காட்சிகள், 69 தியேட்டர்களில் ஒரு காட்சி  தான் கிடைத்தது. மாரி செல்வராஜின் ‘வாழை’ 200 தியேட்டர்களிலும் நான்கு காட்சிகள் ரிலீசாகி, இரண்டாவது நாளே படம் ஹிட்டாகி, பிக்கப்பானதால், 70 தியேட்டர்களில் ‘போ.இ.வெ.தூ’, படத்தைத் தூக்கிவிட்டு, ‘வாழை’யைப் போட்டுவிட்டார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதனால் ரொம்பவே அப்செட்டான சிவா கிலாரியை, படத்தின் மொத்த வசூல் ரொம்ப ரொம்ப கிறுகிறுக்க வைத்துவிட்டதாம். படத்தின் பட்ஜெட் 5 கோடி, புரமோஷன் செலவு 40 லட்சம். ஆனால் ஒரு வாரம் தக்கிமுக்கி ஓடியதில் தியேட்டர்களில் கலெக்‌ஷன் 4 லட்சத்து 90 ஆயிரம். இதில் சிவாவுக்குக் கிடைத்தது 2 லட்சத்து 45 ஆயிரம் தான்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

”அஞ்சரைக் கோடியப் போட்டுட்டு ரெண்டு லட்சத்து சொச்சம் தான் கைக்கு வந்துச்சுன்னா இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது. என்னோட பரிதாப நிலையை யாரிடம் சொல்லி அழுவது” என நொந்து

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வெந்து புலம்புகிறாராம் சிவா கிலாரி.

 

–மதுரை மாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.