“கொலையும் ஒரு கலை தான்” –பகீர் கிளப்பிய கவிதாயினி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“கொலையும் ஒரு கலை தான்” –பகீர் கிளப்பிய கவிதாயினி!

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஜூன் 14- ஆம் தேதி நடைபெற்றது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இதில் பேசியவர்கள்

பாடலாசிரியர் வெரோனிகா, “கவிதாயினியாக கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக சர்ரியலிசம் மற்றும் இருள் முகத்தைப் பற்றி நிறைய கவிதைகளை எழுதி இருக்கிறேன். திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவது இதுதான் முதல் முறை. இயக்குநர் ராகுல் கபாலியுடனான முதல் சந்திப்பில்… ஒரு கொலைக் குற்றவாளி கதாபாத்திரம் கொலையை கலையாகப் பார்க்கிறது. இதன் பின்னணியில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

பயமறியா பிரம்மை
பயமறியா பிரம்மை

ஊரில் என்னுடைய உறவினர் ஒருவர் ரவுடி. தற்போது அவர் உயிருடன் இல்லை. அவரை கொலை செய்து விட்டார்கள். என்னுடைய சிறிய வயதில் நடந்த இந்த சம்பவம் எனக்கு மனதில் ஆழமாக பதிந்தது. இந்த சம்பவத்தால் பெண்கள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டார்கள் என்று யோசித்தேன். அதிலிருந்து கிடைத்த பாடல் தான் படத்தில் இருக்கு “.

ஒளிப்பதிவாளர் நந்தா, “இயக்குநர் ராகுலும் , நானும் பால்ய கால நண்பர்கள். இந்தப் படத்திற்கான விஷுவல் எப்படி இருக்க வேண்டும் என்பதனை திரைக்கதை எழுதும் போதே வடிவமைத்தோம். விண்டேஜ் லுக் வேண்டும் என்றால் அதற்கேற்ற வகையில் லென்ஸ், கேமரா போன்றவற்றை தேர்ந்தெடுத்தோம். திரைக்கதைக்கு என்ன தேவையோ.. அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த திட்டமிட்டோம். அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறோம்.‌ ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இந்தப் படைப்பு பிடிக்கும் என்று நம்புகிறோம். ஆதரவு தாருங்கள்”.

ஒளிப்பதிவாளர் பிரவீண், ”நானும், இயக்குநரும் பால்ய கால சிநேகிதர்கள். பட்ஜெட்டை நிர்ணயித்து விட்டு, அதன் பிறகு திரைக்கதை எழுதச் சொன்னாலும் இயக்குநர் ராகுல் கபாலி அதைவிட அதிகமாகவே எழுதுவார். பயமறியா பிரம்மை படைப்பு சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.‌ இயக்குநர் ராகுல் கபாலி சிறந்த இயக்குநராக வருவார் என வாழ்த்துகிறேன்”.

பயமறியா பிரம்மை
பயமறியா பிரம்மை

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இசையமைப்பாளர் , “இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டதற்கு இப்படத்தின் கதை தான் காரணம். இதனை இப்படத்தின்பாடல்கள், டீசர் ஆகியவற்றை காணும் போது உணர்ந்திருப்பீர்கள். வழக்கமான படங்களிலிருந்து இந்த திரைப்படம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற பரிசோதனை முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். இயக்குநர் ராகுல் கபாலி அடிப்படையில் ஒரு ஓவியக் கலைஞர். அவருடைய ஓவிய அனுபவத்தை இத்திரைப்படத்தில் காட்சிகளாக செதுக்கியிருக்கிறார். இந்த படைப்பு அவரின் நேர்மையான.. உண்மையான.. முயற்சி.‌

இந்தப் படத்திற்கான இசை கோர்ப்பு பணியை ரசித்து செய்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றவாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் ராகுல் கபாலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”.

நடிகர் விஸ்வாந்த், “இந்த சினிமாவை நீங்கள் திரையில் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக தெரியும்.சர்வதேச தரத்திலான இந்த முயற்சியை படக்குழுவினர் மேற் கொண்டி ருக்கிறார்கள்.‌

இயக்குநர் ராகுல் கபாலியை பற்றி ஒரு சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவர் இதுவரை பதினேழு நாடுகளுக்கு டூவீலரில் பயணித்திருக்கிறார்.‌ உலகம் முழுவதும் சுற்றி கிடைத்த அனுபவத்தை கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். ஓவியத்தைப் போல நேர்த்தியாக உருவாக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்”.

நடிகை சாய் பிரியங்கா ரூத், ‘‘ ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகும் ‘பயமறியா பிரம்மை’ படத்தில் நடித்திருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களில் நடித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திரைப்படம் எனக்கு மறக்க இயலாத அனுபவம். இது போன்ற புதிய முயற்சிகளை பல தடைகளை கடந்து போராடி இப்படத்தை வெளியிடுகிறார்கள்”.

நடிகர் வினோத் சாகர், ” இப் படத்தைப் பொறுத்தவரை நான் திடீர் மாப்பிள்ளை தான். படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இயக்குநரை சந்தித்து அவர் அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள். திறமையான தொழில்நுட்பக் குழுவினர் இதில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்”.

நாயகன் ஜேடி , ” இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஓராண்டாக இதற்கான முன் தயாரிப்புகளில் நானும், இயக்குநர் ராகுலும் ஈடுபட்டோம். அதற்கு முன்னதாக ஒரு குறும்படத்தை உருவாக்கினோம். அதுவும் பரிசோதனை முயற்சி தான். அதில் தான் நானும், ராகுலும் அறிமுகமாகி நண்பர்களானோம். அதன் பிறகு கதைகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். அதன் பிறகு ‘பயமறியா பிரம்மை’ படத்தைப் பற்றி பேசிப் பேசி நிறைவு செய்து இருக்கிறோம். படத்தை விரைவில் வெளியிடுகிறோம். ஊடகம் மற்றும் பார்வையாளர்களின் ஆதரவையும் வரவேற்பையும் பொறுத்துதான் எங்களது அடுத்த கட்ட முயற்சி இருக்கும். நன்றி ” .

இயக்குநர் ராகுல் கபாலி, ” இது என்னுடைய முதல் படம். குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து..‌ எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து.. ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” .

இந்தத் திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும். எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து, பிடித்திருந்தால்… ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.