நீச்சல் தெரிந்தவன் ! கல்லூரி நீர்த்தேக்க தொட்டியில் எப்படி சாவான் ! கதறும் பெற்றோர்கள் !
வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவன் அருண் பல்லவ் சடலமாக மீட்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பகிர்ந்து வருகின்றனர்.
பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஜெயப்பிரியா தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளது. இதில் மூத்த மகன் பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இரண்டாவது மகன் வேறொரு கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியில்
B.SC இரண்டாம் ஆண்டு படித்து வரும் அருண் பல்லவ் என்ற மாணவன் சக மாணவருடன்
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் அருண் பல்லவ் சக மாணவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது நீரில் மூழ்கிய மாணவனை தூக்க முடியாமல் திணறிய சக மாணவர்கள் உடனடியாக மூன்றாம் ஆண்டு மாணவர்களை அழைத்துச் சென்று அருண் பல்லவ் சடலமாக மீட்கப்பட்டார்.
உடனடியாக கல்லூரி நிர்வாகம் மூலமாக மாணவனின் உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அருண் பல்லவ் இறந்துவிட்டதாக கூறினார்கள்
இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் இறந்த மாணவரின் பெற்றோருக்கு எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நேற்று மதியம் 3 மணிக்கு மாணவனின் பெற்றோர் சந்திரசேகர்க்கு தகவல் தெரிவித்தனர்.பெரம்பலூர் இருந்து வந்த பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் இறந்த மாணவனின் பெற்றோர் புகார் அளித்தார். ஜெயமங்களம் காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.
மாணவனின் பெற்றோர் கூறுகையில்: எனது மகனுக்கு நன்றாக நீச்சளிக்க தெரியும் என கூறினர். ஆனால் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுக்கு இவர்தான் நீச்சல் கத்து கொடுத்தார் என சக மாணவர்கள் எங்களிடம் தெரிவித்தனர் என்று கூறினார்.
இக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டி 15 அடியை ஆழம் கொண்ட கிணற்றில் எப்படி இறந்திருப்பார் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுவரை கல்லூரி நிர்வாகம் எதற்கும் செவி சாய்க்காததால் இறந்த மாணவனின் பெற்றோர்கள் சிபி சிஐடி விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மாணவன் கல்லூரி படிப்பு செலவிற்காக கட்டிய 14 லட்சம் ரூபாயை தருமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு இறந்த மாணவரின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது:சக மாணவரிடம் குளிக்கச் சென்ற மாணவன் மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்ததாக தெரிவிக்கின்றனர்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியை கல்லூரி நிர்வாகம் இரும்பு வலை அமைத்து மூடாமல் இருந்ததால் கல்லூரி மாணவன் இறப்புக்கு காரணம்
ஆனால் இதுவரை கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியை இரும்பு வலை வைத்து மூடாமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகின்றனர். உடனடியாக கல்லூரி வழங்கத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை இரும்பு வலை போட்டு மூட வேண்டிய எனவும் கல்லூரி நிர்வாகம் தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை மாணவரின் உடலை வாங்க மறுப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் பெற்றோரின் கோரிக்கையான மாணவனின் கல்லூரி படிப்பு செலவிற்காக கட்டிய 14 லட்சம் ரூபாயை திருப்பித் தருவதாகவும் கல்லூரி நிர்வாகம் மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதை ஏற்று பெற்றோர் மாணவனின் உடலை வாங்கிச் சென்றனர்.