’இராவணக்கோட்டம்’ கோக்குமாக்கு ஆட்டம்! ஷாந்தனு கண்ணீர்—மன்னிப்பு—சாமர்த்தியம்—சமாதானம்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

கடந்த 12—ஆம் தேதி ரிலீசாகிய ‘இராவணக்கோட்டம்’ படம் ரிலீஸ் நேரத்திலும் ரிலீசுக்குப் பிறகு இப்போது வரையிலும் சாதி சர்ச்சைகளில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கை சொல்லிருவோம்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன். இவரின் முதல் படம் ‘மதயானைக்கூட்டம்’. அந்தப் படத்தை நாம் பார்க்கவில்லை. இருந்தாலும் தனது முதல் தனது சாதிப் பெருமையை உயர்த்திப் பிடித்திருக்கிறார் என நமது நண்பர்கள் வட்டாரத்தில் சொன்னார்கள். இந்த ‘இராவணக்கோட்டம்’ படத்தைக் கூட நான்கு வருடங்களுக்கு முன்பே, பரமக்குடி மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த இரு பெரிய பணக்காரர்கள் தான் தயாரிக்க ஆரம்பித்தனர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இராவணக்கோட்டம்
 இராவணக்கோட்டம்

ஷூட்டிங் ஆரம்பித்து இருபது நாட்களுக்குள்ளேயே டைரக்டர் விக்ரம் சுகுமாரனின் கோக்குமாக்கு ஆட்டம் ஆரம்பித்தது. இருந்தாலும் சமாளித்து, அனுசரித்து ஷூட்டிங்கை கண்டினியூ பண்ணிக் கொண்டிருந்த போது தான் கொரோனா எண்ட்ரியாகி ஷூட்டிங் நின்று போனது. அதனால் அந்தப் படத்திலிருந்து தயாரிப்பாளர்களும் கழன்று கொண்டனர்.

3

கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின், தயாரிக்க முன்வந்தார் திட்டக்குடி கண்ணன் ரவி என்பவர். துபாயில் பெரிய தொழிலதிபராக இருக்கும் இந்த கண்ணன் ரவி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கே.பாக்யராஜின் தீவிர ரசிகராக இருந்து வருபவர். அவருக்காகவே, அவரின் மகன் ஷாந்தனு நடிக்கும் ‘இராவணக்கோட்டம்’ படத்தைத் தயாரிக்க களம் இறங்கினார்.

பட்ஜெட் தொகை முழுவதையும் ( 7 கோடி ரூபாய் என்கிறார்கள்) கே.பாக்யராஜையும் ஷாந்தனுவையும் நம்பிக் கொடுத்துவிட்டார். ஆனானப்பட்ட மெய்யப்பச் செட்டியாருக்கும் நாகிரெட்டியாருக்கும் தண்ணி காட்டிய சினிமா ’சீட்டிங் கிங்’குகள் ஷாந்தனுவை சும்மாவிட்டுவிடுவார்களா? டைரக்டர் விக்ரம் சுகுமாரனும் கொஞ்சம் ‘விளையாடி’யதால் பாதிப்படம் முடிவதற்குள்ளேயே கண்ணன் ரவி கொடுத்த மொத்த பட்ஜெட்டும் குளோஸ். ஆனாலும் கே.பாக்யராஜ் மீதுள்ள மரியாதையாலும் ஷாந்தனுவுக்கு ஸ்டெடியான ஹீரோ அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும் படத்தைக் கண்டினியூ பண்ணி ஒருவழியாக படம் முடிவடையும் கட்டத்திற்கு வந்தது.

4
ஷாந்தனு  - தொல். திருமாவளவன்
ஷாந்தனு – தொல். திருமாவளவன்

ஃப்ளாஷ்பேக் ஓவர்…

‘இராவணக்கோட்டத்’தின் பி.ஆர்.ஓ.வாக ஆரம்பத்தில் கமிட்டானவர் சுரேஷ் சந்திரா தான். படத்தைப் பற்றிய செய்திகளையும் மீடியாக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தவரும் இவர் தான். படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை துபாயில் ஆசைப்பட்ட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, பத்திரிகையாளர்களை அங்கே அழைத்து வரும் ஏற்பாடுகளை செய்யச் சொன்னார். ஆனால் அதே தேதியில் தான் கமிட்டாகியிருந்த வேறு ஒரு படத்தின் புரமோ வேலைகள் சென்னையில் இருப்பதால், தன்னுடையை நிலையைச் சொல்லிவிட்டார் சுரேஷ் சந்திரா.

இந்த  கேப்பில் உள்ளே எண்ட்ரியானவர் தான் பி.ஆர்.ஓ.ரியாஸ் அஹமது. இவர் துபாய்க்கு அழைத்துச் சென்ற பத்திரிகையாளர்கள் 40 பேரில் 18 பேர் தான் உண்மையான பத்திரிகையாளர்கள். இதனால் இங்கே கடுகடுப்பும் சலசலப்பும் கிளம்பியது. இதெல்லாம் ஷாந்தனு காதுக்கு எட்டியதும் வெலவெலத்துப் போனார்.

இப்படிப்பட்ட கிரிட்டிக்கலான நேரத்தில் தான் ஷாந்தனுவுக்கு பி.ஆர்.ஓ.வாக இருக்கும் ‘எய்ம்’( சதீஷ், சிவா, சதிஷ்) குரூப், ‘இராவணக்கோட்டத்’தின் புரமோ வேலைகளில் சுரேஷ் சந்திராவுடன் கைகோர்த்தது. அதன் பின் நிலைமை கொஞ்சம் சுமூகமான பின் சென்னையில் படத்தின் பிரஸ்மீட்டை மே.01—ஆம் தேதி நடத்தினார்கள்.

இந்த பிரஸ்மீட்டில் தான் , துபாய் சங்கடங்களுக்காக மன்னிப்புக் கோரினார் ஷாந்தனு. டைரக்டர் விக்ரம் சுகுமாரனும், “என்னை மன்னிச்சிருங்க. துபாய் கோபத்தை படத்துமேல காட்டீராதீக” என்றார் உருக்கமாக.

ஷாந்தனு  - தொல். திருமாவளவன்
ஷாந்தனு – தொல். திருமாவளவன்

 

எல்லாம் நல்லபடியாக முடிந்து, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் பிறந்த நாளான மே.10-ஆம் தேதியன்று, ‘இராவணக்கோட்டம்’ பிரஸ் ஷோவுக்கும் ஏற்பாடானது. ஷோ ஆரம்பிப்பதற்கு முன்பு மேடையேறினார்கள் கே.பாக்யராஜ், ஷாந்தனு, டைரக்டர் விக்ரம் சுகுமாரன் ஆகியோர். துபாய் சங்கடத்திற்காக பாக்யராஜும் வருத்தம் தெரிவித்தார். ஷாந்தனுவும் விக்ரம் சுகுமாரனும் மீண்டும் மன்னிப்புக் கோரினார்கள்.

ஆனால் பட ரிலீசுக்கு முதல் நாள், அதாவது மே.11—ஆம் தேதி, சாதி சர்ச்சை கிளம்பியது. படத்திற்காக நான்கு வருடம் ரொம்பவும் கடின உழைப்புக் கொடுத்து நடித்தும், இம்புட்டு சிக்கலா? சர்ச்சையா? என பதறினார் ஷாந்தனு. அதனால் சரத்குமார், தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு ‘இராவணக்கோட்டம்’ படத்தைப் போட்டுக் காண்பித்தார்.

“படம் நல்லாத்தானே இருக்கு. அப்படி ஒன்றும் சர்ச்சையான விசயங்கள் இல்லையே” என ஷாந்தனுவையும் சுகுமாரனையும் பாராட்டினார்கள், பேட்டியும் கொடுத்தார்கள். தனது முயற்சி வெற்றி பெற்றதால் சந்தோஷமானார் ஷாந்தனு.

இப்படி பல கோக்குமாக்கு ஆட்டங்கள் நிறைந்த ‘இராவணக்கோட்டம்’ வெற்றியா? தோல்வியா? என்பதைப் பற்றி நாம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் டைரக்டர் விக்ரம் சுகுமாரனின் அரைவேக்காட்டு அரசியல் புரிதல், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பத்து ஆண்டுகளுக்கு முன்பே அதானி குழுமம் காலூன்றியது தெரியாதது, அந்த மாவட்டத்தின் இரு பெரும் சமூகங்களுக்கிடையே இப்போது வரை தொடரும் இணக்கமின்மை குறித்த குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாதது இதெல்லாம் சேர்ந்தது தான் இந்த ‘இராவணக்கோட்டம்’.

–மதுரைமாறன்

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.