உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு – படங்கள்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழர் பாரம்பரிய வீரவிளையாட்டான உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 16.01.2023 இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், காளைக்கு பைக் மற்றும்பரிசுவழங்கப்பட2ள்ளதுவீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டவுடன் போட்டி தொடங்கப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசு கார்
பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசு கார்

Frontline hospital Trichy

போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்படுவதோடு, போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீர்ர்களுக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டனமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 160பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும், 6 மொபைல் மருத்துவக்குழுவும்15- 108ஆம்புலன்ஸ்கள்கால்நடை மருத்துவக்குழுவினர் 60 பேரும் கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

போட்டி தொடங்கிய பின்னர் ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்று நடைபெறவுள்ளதுபோட்டி தொடங்கியவுடன் முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் அதன் அடிப்படையில் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசு கார்
பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசு கார்

போட்டியின் அதிக காளைகளைப் பிடித்துமுதலிடம் வரும்சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஒன்றும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பாக வழங்கப்படவுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளைக்கு அலங்காநல்லூரை சேர்ந்த பொன் குமார் சார்பில் கறவை பசு மாடு கன்றுடன் பரிசு வழங்கப்பட உள்ளது. இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் பைக் , தங்க காசு, லேப்டாப், குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், , கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 1500காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்போட்டிக்கு வரும் காளைகளை அழைத்துவரும் வாகனங்களில் போட்டிக்கான அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே சோதனை சாவடிகளில் அனுமதிக்கப்படும் எனகாவல்துறையினர்தெரிவித்துள்ளனர்போட்டியில் காளைகள் டோக்கன் வரிசைப்படி அவிழ்த்துவிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறதுபாலேமடு ஜல்லிக்கட்டு போட்டியை பாலமேடு கிராம மகாலிங்க மடத்து கமிட்டி சார்பில் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து சமத்துவமாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.

சிறப்பாக விளையாடும் காளைக்குபசுமாடு கன்றுடன் பரிசு
சிறப்பாக விளையாடும் காளைக்குபசுமாடு கன்றுடன் பரிசு

போட்டியின் போது 1கிலோமீட்டர் தூரம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 100மீட்டர் வரை தேங்காய்நார் பரப்பபட்டுள்ளது.
காளைக்கான கலெக்சன் பாயிண்டில் உடைப்பு ஏற்படாதவாறு இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் போட்டி நடைபெறும் பாலமேடு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் காளைகள் உள்ளே விழுந்து காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கிணறுகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.