அங்குசம் பார்வையில் ‘தீயவர் குலைநடுங்க’
தயாரிப்பு: ஜி.எஸ்.ஆர்ட்ஸ் ஜி.அருள்குமார். டைரக்டர்: தினேஷ் இலட்சுமணன், ஆர்டிஸ்ட்: அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, ராம்குமார், என்.பி.கே.எஸ். லோகு, தங்கத்துரை, ஃபிராங்க்ஸ்டர் ராகுல், வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி ராஜ்குமார், ஓ.ஏ.கே.சுந்தர், பிஎல் தேனப்பன், ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யூ, இசை: பரத் ஆசீவகன், பி.ஆர்.ஓ: யுவராஜ்
நள்ளிரவு நேரம். சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் ஒரு கார் ஆக்சிடெண்டாகி எழுத்தாளர் ஜெபா [ லோகு] கொல்லப்படுகிறார். இதான் படத்தின் முதல் சீன். இது ஆக்சிடெண்ட் அல்ல…திட்டமிட்ட படுகொலை என ஸ்மெல் பண்ணி விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி[ அர்ஜுன்]. ‘காவிரிக் கறை’ [ கவனிக்கவும் கரை அல்ல கறை] என்ற எழுத்தும் 3818 என்ற எண்ணும் தான் க்ளூ.
இதைவைத்து இடைவேளை வரை படத்தைக் கொண்டு போயிருக்கிறார் டைரக்டர் தினேஷ் இலட்சுமணன். இடையிடையே ஐஸ்வர்யா ராஜேஷ்—பிரவீன் ராஜாவுக்கிடையிலான லைட்டான லவ் எபிசோட் வைத்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பின்பு படம் கொஞ்சம் வேகமெடுத்து, க்ளைமாக்ஸ் நெருங்கும் போது விறுவிறுப்பாகிறது. அந்தக் காவேரி ஒரு சிறுமி, அதிலும் வாய் பேசமுடியாத, கைகள் செயலிழந்த மாற்றுத்திறனாளி, இவளின் அம்மா அபிராமி வெங்கடாசலம், இவர்களுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமிடையே இருக்கும் உறவு, இதெல்லாம் இடைவேளைக்குப் பின்பு ஃப்ளாஷ்பேக்கில் கொண்டு வந்து கவனம் ஈர்க்கிறது திரைக்கதை. அந்த ஃப்ளாஷ்பேக்கில் வேல ராமமூர்த்தியின் எண்ட்ரியும் கிரிப்பாகத் தான் இருக்கிறது.
படத்தின் ஹீரோ ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்பதால் செமத்தியான இரண்டு ஃபைட் சீன்கள் மிரட்டுகிறது. அதிலும் அந்த லிஃப்டுக்குள் ரவுடிகளைப் போட்டு பொளந்து கட்டும் சீனில் அப்ளாஷ் அள்ளுகிறார் அர்ஜுன். இவருக்கு ஈக்குவலாக இரண்டு ஃபைட் சீன்களில் ஐஸ்வர்யா ராஜேஷும் அதிரடி காட்டி அசத்துகிறார். இவருக்கும் பிரவீன் ராஜாவுக்கும் லவ் எபிசோட் இருப்பதால், கண்டிப்பாக ஒரு டூயட் வைத்தே ஆக வேண்டும் என்பதற்காக கலர்ஃபுல் சாங் வைத்திருக்கிறார்கள். அவர்களில் லவ் எபிசோடை ஏன் டீப்பாக காட்டலை என்பதற்கு க்ளைமாக்ஸில் கரெக்டா விடை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
பச்சிளம் சிறுமியைச் சீரழிக்கும் கொடூரனாக நடிகர் திலகத்தின் மூத்த வாரிசு ராம்குமார். அண்ணே…ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? வெறுப்பான வேசம்?
இப்பெல்லாம் தமிழ் சினிமாவில் பச்சிளம் சிறுமிகளைச் சீரழிக்கும் சீன்களைப் பார்த்தாலே டைரக்டர்கள் மீது கடுங்கோபமும் அடங்காத வெறியும் படபபடப்பும் வருது. ஆனால் ’இந்த தீயவர்குலை நடுங்க’ படத்திலோ…பச்சிளம் சிறுமி, அதிலும் மாற்றுத்திறனாளிச் சிறுமியைக் காட்டியதும் நமக்கு ஈரக்குலையே ஆடிப்போச்சு.
ஏப்பா டைரக்டர்ஸ் கொஞ்சமாவது திருந்துங்கப்பா… பச்சப்புள்ளகளும் அவர்களை பெற்றவர்களும் நிம்மதியா இருந்துட்டுப் போகட்டும்..
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.