தீம் பார்க் – ரிசார்ட்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –18

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Hotel என்றால் தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய இரண்டு முதன்மையான சேவைகளையும் இதர வசதிகளையும் வழங்கும் துறை ஆகும். ஹோட்டல் தொழிலில் உள்ள பல்வேறு உட்பகுதிகளைப் பற்றியும் செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு, உயர்வு போன்றவற்றைப் பார்த்தோம். ஹோட்டல் உலத்தை ஒத்த பல்வேறு துணைத் துறைகள் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. அவ்வாறான துறைகளின்சேவைகள், வேலை வய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து இனிவரும் தொடர்களில் பார்ப்போம்.

விடுமுறை மற்றும் பொழுதுபோக்கிற்காக மக்கள் பயணப்படுவது பன்னெடுங்காலமாக இருந்து வரும் பழக்கம் ஆகும். இன்றைக்கு ஒரு 30-40 ஆண்டுகளுக்கு முன்னால், நடுத்தர வர்க்கத்தினரர் விடுமுறைப்பயணத்தின் பொழுது தங்கள் உற்றார் உறவினர் இருக்கிறார்களா என பார்த்து அங்கு சென்று தங்கி விடுமுறையினை கழிப்பர். ஆனால் கடந்த 15-20 ஆண்டுகளாக, ரிசார்ட்களுக்கும் தீம் பார்க்குகளுக்கும் அதிகம் செல்லும் பழக்கம் உள்ளது. யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், நாமும் எந்த சிரமமும் இல்லாமல் மகிழ்வாக  பொழுதுபோக்கலாம் என்பதால் இவ்வாறு மக்கள் விரும்புகின்றனர்.

Kauvery Cancer Institute App

ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி –18இந்தத் துறை இனி வரும் காலங்களில் இன்னும் பெருகி வளரும். விடுமுறைக்காகவே சேமிக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. சில ரிசார்ட்டுகள் உறுப்பினர் சந்தா போன்ற சேவைகளை வழங்குகிறது. நம்மில் பலர் விடுமுறை பட்ஜெட் போடுவது இன்று வழக்கமாகிவிட்டது. அந்த ரிசார்ட் மற்றும் தீம் பார்க் ஆகியவை ஹோட்டல் துறை சார்ந்த துறை ஆகும். அதனைப் பற்றி இத்தொடரில் காண்போம்.

மனமகிழ்வான விருந்தினர் அனுபவங்களை வழங்கும் ரிசார்ட் என்பதும் ஹோட்டலை ஒத்த விருந்தோம்பல் சேவைகள், தங்குமிடங்கள் மற்றும் வசதிகளைதரும் ஒரு அருமையான தொழில் ஆகும். ரிசார்ட் செயல்பாடுகளிலும் Front Office, Housekeeping, F&B Service, Food Production போன்ற அனைத்து ஹோட்டல் உட்பகுதிகளும் இருக்கும். இவை அல்லாமல் பொழுதுபோக்கு வசதிகள், விளையாட்டுகள் போன்ற அம்சங்கள் ரிசார்ட்களில் இருக்கும். பொதுவாக தங்களது விடுமுறையை கழிக்க விரும்பும் விருந்தினர்கள், ரிசார்ட்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி –18நீர் விளையாட்டு, உள் விளையாட்டுகள், வெளி விளையாட்டுகள், குழு விளையாட்டுகள் என பல கேளிக்கை பொழுதுபோக்குகள் கொண்டு பல ரிசார்டுகள் உள்ளன. மலை சார்ந்த இடங்களில் மலையேற்றம் போன்ற வசதிகளும் உள்ளன. இந்த சேவைகளை வழங்குவதற்காக ரிசார்ட்களில் Holiday Activities என ஒரு துறையை நிர்வகிக்கிறார்கள். சிறிய ரிசார்ட்களில், தனித்துறையாக இல்லாமல், ரிசார்ட்டின் மற்ற துறை பணியாளர்களே இந்த சேவைகளை செய்கின்றனர்.

ரிசார்ட்களில் இன்னும் பல சேவைகளும், வேலை வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன. வணிக வாய்ப்புகள், பூட்டிக்ரி சார்ட்டுகள், ஸ்பாக்கள், பொதுச் சுற்றுலா அனுபவம், சுற்றுச்சூழல் சுற்றுலா அனுபவங்களை வழங்குவது, தொழில் முனைவோர் நீர் விளையாட்டு, சாகச சுற்றுப்பயணங்கள் அல்லது நல்வாழ்வு திட்டங்கள் போன்ற செயல்பாடுகளுக்காக ரிசார்ட்டுகளுடன் இணைந்து செயல்படலாம். ஆடம்பரமாகவும் மற்றும் அனுபவமிக்க பயணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ரிசார்ட் செயல்பாடுகள் தொழில் வளர்ச்சி மற்றும் வணிக முயற்சிகளுக்கு நல்ல வாய்ப்புகளாக உள்ளன.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

விடுமுறை காலங்களில் மக்கள் அதிகம் செல்லக்கூடியது தீம் பார்க்குகளும் ஆகும். இப்பொழுதெல்லாம் பல ஊர்களிலும் தீம் பார்க்குகள் புதியதாக துவங்கப்படுகின்றன. இவற்றிலும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மறக்க முடியாத அனுபவங்களை தரும் சவாரிகள் மற்றும் பொழுதுபோக்குகளை நிர்வகிப்பது, உணவகங்களைநிர்வகிப்பது, முழு செயல்பாட்டு மேலாண்மை, சவாரி செயல்பாடுகள், விருந்தினர் சேவைகள் மற்றும் மார்க்கெட்டிங் போன்ற பணிகளில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி –18வணிக வாய்ப்புகளில்; உணவகங்கள், சில்லறை விற்பனை கடைகள் அல்லது பூங்காக்களுக்குள் பொழுதுபோக்கு இடங்களைத் திறப்பது ஆகியவை அடங்கும். தொழில் முனைவோர், நேரடி நிகழ்ச்சிகள் அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் மூலம் தொழில் நடத்தலாம். கூடுதலாக, தீம் பார்க் மேலாண்மை சேவைகள், மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை இலாபகரமான வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன. அதிவேக அனுபவங்களுக்கான வளர்ந்து வரும் தேவையுடன், தீம் பார்க் செயல்பாடுகள் தொழில் வளர்ச்சி மற்றும் புதுமையான வணிக முயற்சிகளுக்கு பரந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.

தீம் பார்க் செயல்பாடுகள், சுற்றுலா இடங்கள், பொழுதுபோக்கு மற்றும் விருந்தினர் சேவைகளை நிர்வகிப்பதில் அடங்கும். இதனால் மறக்கமுடியாத அனுபவங்கள் உருவாக்கப்படும். பயனுள்ள செயல்பாடுகளுக்கு கவனமாக திட்டமிடல், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில்  கவனம் தேவை.

இந்த துடிப்பான மற்றும் அற்புதமான துறையில் பல்வேறு வாய்ப்புகளைஅறிந்து பயன் பெறலாம். இதுபோல இன்னும் பல வாய்ப்புகள் இருக்கும் ஹோட்டல் துறை சார்ந்த மற்ற துறைகளைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

தொடரும்

கபிலன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.