அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் ! நீதி விசாரணை நடத்த கோரிக்கை !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் திருச்சியில் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள். ஜூன் -5 அன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில், சிபிஐ (எம் எல்) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது.

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் இப்பொதுக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் வீ மூ வளத்தான், மாநில துணை பொதுச்செயலாளர் அவிகிதொச; தோழர் மு இராமச்சந்திரன், மாநில செயற்குழு (ஏஜசிசிடியு); தோழர் கோவன் பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்; தோழர் அன்பு  மாநில பொதுச் செயலாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி; தோழர் அம்பேத்கர் மாநில ஒருங்கிணைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி; தோழர் காவிரி நாடன் மாநில செயற்குழு உறுப்பினர்,மக்கள் அதிகாரம்; தோழர் திருச்சி செழியன் மாநில பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரம்; தோழர் தனவேல், மாநில பொதுச் செயலாளர், புரட்சிகர இளைஞர் கழகம்; தோழர் இந்திரஜித் மாநில கிளர்ச்சி பிரச்சாரக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; தோழர் பானுமதி வழக்கறிஞர், தலைவர் முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம்; தோழர் பாலமுருகன், மாநில செயலாள,ர் மக்கள் உரிமை சிவில் கழகம்; தோழர் லோகநாதன், மாநில பொதுச் செயலாளர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் நிறைவாக, அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு (FASR) மற்றும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ; சிபிஐ (எம்-எல்) கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் மற்றும் மக்கள் அதிகாரம் தலைமை குழு தோழர் ராஜு ஆகியோர் நோக்கவுரையாற்றினார்கள்.

பாடகர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் கார்க்கியின் நன்றியுரையோடு பொதுக்கூட்டம் நிறைவுற்றது.

 

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—            கலைமதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.