தேனியில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் கடத்தப்படும் கனிம வளங்கள்
தேனியில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் கடத்தப்படும் கனிம வளங்கள்
கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படும் கனிமவளங்கள்
இந்த கனிமவள கடத்தல் குறித்து சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐய்யப்பன் நம்மிடம் பேசிய போது….
வீடியோ பேட்டி
தமிழகம் முழுவதும் கல் குவாரிகள் 3845 மேல் செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட மணல், கல் குவாரிகள், மண், கல்குவாரிகள்
செயல்பட்டு வருகிறது.
தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 3 வழித்தடங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.
குறிப்பாக போடி இருந்து மூணார் சாலையிலும், கம்பம் இருந்து குமுளி சாலையிலும், கம்பம் கம்பம் மெட்டு சாலைகளிலும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் உடை கற்கள், கிரஷர் கற்கள், மணல், மண் 24 மணி நேரமும் எடுத்துச் செல்லப்படுகிறது.
வீடியோ பேட்டி
இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்கள் கேரள மாநிலத்தில் தேக்கடி-மூணார் 845 சாலை விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இரண்டு வழித்தட சாலைகளை நான்கு வழித்தட சாலைகளாக மாற்றுவதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
நான்கு வழி சாலை பணிகள் தற்போது 50 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சாலை விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் கற்கள் அனைத்தும் தேனி மாவட்டம்: போடி, ஆண்டிபட்டி, சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மலைகளைகளையும், பாறைகளையும் வெடி வைத்து தகர்த்தும் உடைத்து எடுத்து செல்லப்படுகிறது.
மேலும் தினந்தோறும் மூணாறில் இருந்து போடி, குமுளி, கம்பம் மெட்டில் இருந்து தேனி வருவதற்குள் கேரளா பதிவு எண்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மலைகளை உடைத்தெடுத்த கற்களை சுமந்தபடி குறைந்தபட்சம் 100 டாரஸ் லாரிகளாவது கேரளா நோக்கி செல்வதை பொதுமக்கள் தினந்தோறும் காண முடிகிறது.
வீடியோ பேட்டி
இப்போது மூணாறு சாலை பணிகளுக்காக தேனி மாவட்டத்தில் இருந்து போடி, ஆண்டிபட்டி பகுதிகளிலுள்ள மலைகளையும் பாறைகளையும் பறி கொடுத்து வருகிறோம்..