அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“உயிர்” என்னும் “தமிழ்” இல்லையே… பிணம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்த பதிவை என்னைத்தவிர வேறு யாராலும் மிக சரியாக பதிவிட முடியாது என்று நினைக்கிறேன். காரணம் எனது தாய்மொழி கன்னடம். அதில் என்னால் எழுத படிக்க தெரியாது. வீட்டிற்குள் பேசுவோம் அவ்வளவுதான். இதோ… எழுதிக்கொண்டிருக்கேனே… எனது உயிர் மொழி தமிழ், அதில் என்னால் பேசமுடியும், எழுத முடியும், படிக்க முடியும், இவ்வளவு ஏன்… எனக்கு சம்பாதித்து கொடுப்பதே என் உயிர் மொழிதான். அது என்ன தாய் மொழி – உயிர் மொழி?

உயிர் இருக்கும் வரை ஒருவனுக்கு தாய், தந்தை, அண்ணன், அக்கா எல்லாம். உயிர் இல்லையெனில்?? அவனை என்ன என்று அழைக்கிறோம்? “பிணம்” (பொணம்) என்றுதான் சொல்வோம். அதுபோல, கன்னடம் (தாய்), தெலுங்கு (தந்தை), இந்தி (அண்ணன்), மலையாளம் (அக்கா) இப்படி உறவு என்று சொல்லக்கூடிய எத்தனை மொழிகள் இருந்தாலும், “உயிர்” என்று “தமிழ்” இல்லையே… பிணம்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நடிகர் கமல் கூறிய கருத்துக்கள் சரியா தவறா? என்கின்ற இடத்திற்குள் செல்ல வேண்டாம். தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததோ… அல்லது கன்னடத்தில் இருந்து தமிழ் பிறந்ததோ என்கிற கருத்திற்குள்ளும் போக வேண்டாம்.

என் கருத்தினை மட்டும் பதிவு செய்கிறேன். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்கள். அவ்வை எழுதிய ஆத்திசூடி, எட்டுத்தொகை – பத்துப்பாட்டு, போன்ற எண்ணற்ற சங்கத்தமிழும், சைவர்களின் மிக பெரிய பொக்கிஷமான திருவாசகமும், வைணவர்களின் பெரிய பொக்கிஷமான நாலாயிரதிவ்யப்ரபந்தமும் தமிழின் சிறப்பை போற்றுகிறது. எனக்கு தெரிந்து பிறமொழிகளில் இத்தகைய சிறப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அதுமட்டுமா… இந்தியாவில் உள்ள பெருமான்மையான கோயில்களில் “கிரந்தம் மொழி” என்று சொல்லக்கூடிய தமிழுக்கு ஆதாரமான ஆதிய மொழி காணப்படுகிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள சில கோயில்களில்கூட நேரடியாகவே தமிழ் மொழியை பார்க்கமுடிகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தியா முழுவதிலும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் சென்று அந்த ஊர்களை வளர்த்துள்ளனர் (கர்நாடகா உட்பட) வெளிநாடுகளில்கூட தமிழர்கள் மிக பெரிய பதவியில் உள்ளார்கள்.

சினிமாவை எடுத்துக்கொண்டால்கூட ஏராளமான கன்னடம், தெலுங்கு, மலையாளம் நடிகர்கள் தமிழில் பேசுகிறார்கள். தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆக, எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும், அந்த மொழியைவிட தமிழ் மொழி ஒரு படி மேலாகத்தான் இருக்கிறது. அது தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை!

ஆனால, ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி நான் தைரியமாக எழுதுவேன், பேசுவேன் யாருக்கும் பாதிப்பில்லை. கமல் போன்றவர்கள், மொழியை பற்றி பேசும் போது கவனம் தேவை. விஜய்யை போல் அவர் சினிமாவை விட்டுவிட்டு என்ன கருத்தை வேண்டுமானாலும் பேசலாம். சினிமாவில் இருந்துக்கொண்டு மொழிக்கருத்தினை பேசுவது சரியில்லை. சினிமா பொதுவானது. கமல் பேசிய வார்த்தையினால் பலரும் பாதிப்படைகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வரும் கன்னட நடிகர்களிடத்தில் காவேரி பிரச்சனைகளை எழுப்பினால், அவர்கள் பேச மறுத்துவிடுகிறார். புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். இங்கேயும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளுங்கள். தமிழை அந்த இடத்தில் கமல் முதன்மைப்படுத்திவிடக்கூடாது. முதன்மைப்படுத்திவிட்டார். இருந்த போதிலும் கமல் நம்மவர். அவருக்கே ஆதரவு!  #stand by kamal.

 

—    ரா.ரெங்கராஜன்,  பத்திரிக்கையாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.