”இவா் சித்த மருத்துவா் அல்ல… போலி மருத்துவர்…” AFAAQ -போலி மருத்துவர்கள் ஒழிப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

0

மூக அக்கறை உள்ள பத்திரிகை நண்பர்களுக்கு AFAAQ -போலி மருத்துவர்கள் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பாக வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் போலிச் சான்றிதழ்கள் தயாரித்து விநியோகித்து வந்த போல ஆசாமிகள் தொடர்பாக செய்திகள் அனைத்து பத்திரிகை ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேற்கண்ட இந்த வழக்கானது சிபிசிஐடி பிரிவு போலீசாரின் நேரடி கவனத்திற்கு உட்பட்டு விசாரணைகள் நடைபெற்ற வருகிறது என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இந்த வழக்கில் போலி சித்த மருத்துவ ,ஆயுர்வேத, மாற்று மருத்துவ என்ற பெயரில் சான்றிதழ்கள் தயாரித்து விநியோகித்து வந்த ஏஜெண்டாக திருச்சியை சேர்ந்த போலி மருத்துவர் சுப்பையா பாண்டியன் முக்கிய குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

போலி மருத்துவா் சுப்பையா பாண்டியன்
போலி மருத்துவா் சுப்பையா பாண்டியன்

 

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

இந்த சுப்பையா பாண்டியன் என்பவர் முறைப்படி எந்த மருத்துவக் கல்லூரியிலும் படிக்காத ஒரு போலி மருத்துவர் மற்றும் தனக்கு தானே போலி மருத்துவ சான்றிதழ்களை உருவாக்கினார் என்பதும் போலிசாரின் விசாரணையில் தெரியவருவதாக ஊடகங்களே கூறும் நிலையில் அவரது வீட்டிலும் போலியான மருத்துவ சான்றிதழ்கள் அவரது மற்றும் அவரது மணைவி பெயரிலும் கிடைக்கப்பெற்றன என்பதனை இந்த செய்தி குறிப்பின் வாயிலாக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களும் தவறான முறையில் அகில இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் என்ற  கோணத்தில் செய்தி வெளியிட்டு வருகிறீர்கள்.

இந்த செய்தியானது அடிப்படையில் மிகுந்த தவறான புரிதலை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறது.

சுப்பையா பாண்டியன் என்பவர் போலி சித்த மருத்துவர் அவ்வாறு இருக்கையில் ஒரு சில ஊடகங்கள்  ஊடக தர்மத்தை மீறி அவரை சித்த மருத்துவ தலைவராக, மருத்துவராக சித்தரித்து வருகிறீர்கள். இது மாதிரியான செய்திகள் ஒட்டுமொத்த சித்த மருத்துவர்கள் சமூகத்தை புண்படுத்தும் செய்தியாகவும் சமூகத்தில் சித்த மருத்துவர்களுக்கு ஊடகங்களால் ஏற்பட்டுள்ள அவமரியாதையாகவும் கருதுகிறோம்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

எனவே இந்த வழக்கில் திருச்சியில் கைது செய்யப்பட்ட நபரான சுப்பையா பாண்டியன் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்கு தெரியப்படுத்தும் கடமை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலருக்கு உள்ளதால் ( Trichy DSMO) .

எங்களது அமைப்பின் சார்பில் இந்திய மருத்துவ துறையின் ஆணையர் வழியாக கடிதம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .ஆகவே அரசின் பொறுப்பு அதிகாரியாக உள்ள திருச்சி மாவட்ட சித்த மருத்துவ

அலுவலரிடம் ஊடகங்கள் இந்த உண்மைத்தன்மையை உறுதி செய்து மிகுந்த நேர்த்தியுடன் தன் கடமையை  உணர்ந்து  ஊடக  தர்மத்துடன்  செய்தி வெளியிடுமாறும், போலி மருத்துவர்கள் கைது நடக்கும் பொழுது ஊடகங்கள் இனிவரும் காலத்தில் முறையே போலி மருத்துவர்கள் கைது என்றே செய்தி வெளியிட அனைத்து ஊடகங்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு,

Dr.பா.ஸ்ரீமுகநாகலிங்கம் MD(s), சேர்மன்,

ஆயுஸ் போலி மருத்துவர்கள் ஒழிப்பு குழு,

தமிழ்நாடு.

Contact no: 9688725936.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.