இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த திட்டம் உள்ளது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெருமிதம்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த திட்டம் உள்ளது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெருமிதம்
தமிழக அரசு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டிற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்ந்தெடுத்து சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தல ரூ.3.50,000 விதம் நிதி ஒதுக்கீடு செய்து.தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த திட்டத்திற்காக மேலும் கூடுதலாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் 127 பயனாளிகளுக்கு தல
3,50,000 வீதம் ரூ. 4 கோடியே 44 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
பின்பு பேசிய அமைச்சர் கடந்த 2010 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்தார்.அந்தத் திட்டத்தை நமது முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதோடு நிறுத்தாமல் வீடு கட்டுவதற்கான மானியத் தொகை ரூ.3,50,000 வழங்கி வருகிறார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி முதலமைச்சரே நேரடியாக தினந்தோறும் கண்காணித்து, அமைச்சர் மாவட்ட ஆட்சியர் எங்களை போன்றவர்களை ஆய்வுக்கு அனுப்பி அந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கான மனுக்கள் ஏராளமாக வந்த வண்ணம் உள்ளதால், கூடிய விரைவில் தகுதி உடைய பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர், ரகுராமன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர்,ஜெயசீலன், நகர் மன்ற தலைவர் குருசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், நிர்மலா கடற்கரை ராஜ், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், கோட்டாட்சியர்,சிவகுமார், வட்டாட்சியர்,ராஜாமணி, மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாரீஸ்வரன்