தூக்கமும் உன் கண்களைத் தழுவட்டுமே என்று பாராளுமன்றத்தில் தூங்கியவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் தான்-அமைச்சர் ஜெயக்குமார்
தூக்கமும் உன் கண்களைத் தழுவட்டுமே என்று பாராளுமன்றத்தில் தூங்கியவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
பெருந்தலைவர் காமராஜர் 117 வது பிறந்தநாள் விழாவையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க தினம் நேர்மையை தனது வாழ்க்கையாகக் கொண்ட பெருந்தலைவர் காமராஜரின் விழா, தமிழகத்தை பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயர்த்திய மாபெரும் தலைவர் காமராஜர்.
அதேபோல் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளார் அவரது இயற்பெயர் வேதாச்சலம் தமிழுக்கு தொண்டாற்றியவர் தமிழில் எந்த முழு வெற்றி மொழிகள் ஆதிக்க இருக்க கூடாது. குறிப்பாக சமஸ்கிருதம் இருக்கவே கூடாது. என்றவர் மறைமலை அடிகளார். அவரது 143-வது பிறந்த நாள் விழா இவ்விரு விழாவை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் இங்கிலாந்து கடைசி நிமிடத்தில் வெற்றியை பெற்றது. அதேப்போல் திமுகவும் நியூசிலாந்தை போல் தோற்றுவிடும். அண்ணா திமுக இங்கிலாந்தை போல் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறும்.
தமிழச்சி தங்கபாண்டியன் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார் .
தமிழச்சி தங்கபாண்டியன் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்.
திமுகவில் தான் போய் பேசுபவர்கள் உள்ளவர்கள் அதிகம்.
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்று பாராளுமன்றத்தில் தூங்கியவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் தான் எனறார்.