பழங்குடியின பெண்ணுக்கு மிரட்டல்! திமுக கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 67 விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சூரியகலா டெய்லர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சண்முகவேல் தனது குடும்பத்துடன் இதே பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வீட்டின் முன் அமைந்துள்ள கோவில் நிலத்திற்கு சொந்தமான இடத்தில் குடிதண்ணீர் தொட்டி ஒன்றை கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் அமைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து குடிதண்ணீர் தொட்டி அமைக்க விராட்டிபத்து திமுகவை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் நாகநாதன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவுன்சிலர் நாகநாதன், சண்முகவேல் மற்றும் சூரிய கலாவிடம் குடிநீர் தொட்டியை அகற்றுமாறு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ளார் என குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக சண்முகவேல் சூரியகலா தம்பதியினர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாதிய ரீதியாக தரைக்குறைவாக பேசுவதாகவும், சூரிய கலா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் வந்து தன்னுடன் பாலியல் இச்சைக்கு இணங்குமாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் வேதனை அடைந்த சூரிய கலா தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்ததை அடுத்து சண்முகவேல் இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் காவல் துறையினருக்கும் ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 67 ஆவது வார்டு கவுன்சிலர் நாகநாதன் தனது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதால் அச்ச உணர்வுடன் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றார்.
வீட்டின் முன்பு குடிநீர் தொட்டி அமைப்பதை சாக்காக வைத்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பல்வேறு தொந்தரவுகளை தொடர்ச்சியாக கவுன்சிலர் நாகநாதன் கொடுத்து வரும் நாகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.