பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பணிமன்றம் சார்பில் முப்பெரும் விழா !
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பணிமன்றம் சார்பில் திருத்தவத்துறை திரு ஆதிரைப் பெருவிழாவை முன்னிட்டு 75 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்குபெறும் மங்கள இசை விழா “தமிழ்ச் சமய சான்றோர் செங்கல்வராய பிள்ளை” நூல் வெளியீட்டு விழா
நாதஸ்வர இசைச்செல்வர் தோகைமலை ரெ.கருப்பையா, மலைக்கோட்டை சு.சுப்ரமணியன் ஆகியோருக்கு மங்கள இசை மன்னர் விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா 18-12-2023 அன்று இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
முப்பெரும் விழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் இளவரசு ஸ்ரீமத் சபாபதித் தம்பிரான் சுவாமிகள் பா.எழில்செல்வன் எழுதிய “தமிழ்ச் சமய சான்றோர் தணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை” என்ற நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். சிவாலயம் ஜெ. மோகன் பதிப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு பரமாச்சார்ய சுவாமிகள் தோகைமலை கருப்பையா மற்றும் கலைமாமணி சுப்பிரமணியன் ஆகியோருக்கு விருது வழங்கியும் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டும் ஆசியுரையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
தாமல்.கோ.சரவணன் அவர்கள் நூலுக்கான மதிப்புரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக ஜி.வி.என் ( GVN) மருத்துவமனை இயக்குனர் மருத்துவ வள்ளல் வி.ஜெ.செந்தில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் வழக்கறிஞர் பெ.உதயகுமார். தேசிய கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் தலைவர் பேராசிரியர் மாணிக்கம் இலால்குடி நகர் மன்றத் தலைவர் துரை மாணிக்கம் கோயில் செயல் அலுவலர் நித்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இசைவிழாவை நெறிப்படுத்திய திருப்புகழ் தமிழாகரர், முனைவர் சண்முக. செல்வகணபதி இசை பேருரை ஆற்றினார்