தொடர் கள்ளக்காதல் கொலைகள் ! சீரழியும் இல்லற வாழ்க்கை !

0

கள்ளக்காதல், கொலைகள், கைதுகள் – சீரழியும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்!

திருப்பத்தூர் அருகே இருவேறு கள்ள தொடர்பு கொலைகள் அதிர்ச்சி ,சம்பவங்கள் !!

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீபகாலமாக தகாத உறவுமுறையால் ஏற்படும் கொலைகள் அதிகரித்து வருகின்றன

அந்த வகையில் திருப்பத்தூர்  மாவட்டம் காக்கங்கரை அடுத்த  நத்தம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கமலேசன் கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இவருடைய மனைவி மஞ்சுளா  (42)  அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் (51)  என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக  கணவன், மனைவி போல வாழ்ந்துள்ளனர். மிக  நெருக்கமான  புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளனர் இந்த நிலையில், மஞ்சுவுக்கு திடீரென வேறோருவருடன்  தொடர்பில் இருப்பதாக குப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டு   2018 ஆம் ஆண்டு பிரிந்து சென்றுள்ளார்.

- Advertisement -

குப்பன் , மஞ்சுளா
குப்பன் , மஞ்சுளா

இதற்கிடையில் மஞ்சுளாவிடம் மீண்டும் நெருக்கமாக இருக்க  முயன்றிருக்கிறார் குப்பன் , இதற்கு மறுப்பு தெரிவித்த மஞ்சுளாவிடம் தான் 10 லட்சம் செலவு செய்துள்ளேன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார் . இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . நேற்று முன்தினம்  (டிசம்பர் 18) அன்று மீண்டும் மஞ்சுளா வீட்டுக்கு  சென்ற குப்பன் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த பெட்ரோலை  மஞ்சுளா மீது  ஊற்றி தீ வைத்துள்ளான் .

தீ பரவி அலறித் துடித்த மஞ்சுளாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்  அவரை மீட்டு,  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி,  (டிசம்பர் 20 )அன்று  மஞ்சுளா உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த கந்திலி போலீஸார், கள்ளக்காதலன் குப்பனைக் கைது செய்துள்ளனர் .

விஜயகுமார் - வனிதா
விஜயகுமார் – வனிதா
4 bismi svs

இதற்கிடையில் , வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி கோயான் கொள்ளையை சேர்ந்தவர் விஜயகுமார்(35) . மலேசியாவில் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய நிலையில் கடந்த ( நவம்பர்  21) வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா  பலக்கல் பாவி முருகன் கோவில் மலையடிவாரத்தில் கொலை செய்யப்பட்டு பாதி நிலையில் புதைத்திருக்கிறார்கள்.என திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வர  பினத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில்  விஜயகுமார் வெளிநாட்டில் இருந்த போது  வினிதாவுக்கும்  அவரது  நண்பர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராகவேந்திரனுக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை போட்டு தள்ள மனைவியே கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்ததும்  தெரியவந்தது , கடந்த  (நவம்பர் 15)  இந்த கள்ள காதல் ஜோடிகள்  ஜோலார்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி  கொலைகான திட்டத்தை தீட்டியுள்ளனர் ,  கணவர் இருக்கும்வரை நாம் இருவரும் நிம்மதியாக இருக்க முடியாது என்றும், எப்படியாவது அவனை  கொன்றுவிடும்படியும், ஐடியா கொடுத்துள்ளார் வினிதா.,

இந்த நிலையில் ( நவம்பர் 19) அன்று   ராகவேந்திரன், விஜயகுமாருக்கு போன் செய்து, எனக்கும் உன் மனைவிக்கும் எந்த தொடர்பும் இல்லை நீ என் நண்பன்  என்று நம்ப வைத்து நாம இருவரும் மது அருந்தலாம் என  ராகவேந்திரன் அழைக்க அதனை நம்பிய  விஜயகுமார் இருவரும் பலக்கல் பாவி மலை அருகே உள்ள காட்டில் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.. ஒரு கட்டத்தில் விஜயகுமார் மதுபோதை தலைக்கு ஏறி மயங்கி விழுந்துள்ளார்..

கள்ளக்காதல் கொலைகள்
கள்ளக்காதல் கொலைகள்

திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்து அங்கேயே குழி தோண்டி புதைத்துள்ளன்  ராகவேந்திரன் மற்றும்  துணைக்கு போன அவனது நண்பர் சங்கர் இருவரையும் திம்மாம் பேட்டை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் , மேலும் இந்த கொலை வழக்கில் விஜயகுமாரின் மனைவி வினிதாவுக்கும்  தொடர்பு இருப்பது தெரியவர  அவரையும் போலீசார் கைது செய்து  வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

கூடா ஒழுக்கங்கள் பேணப்படும் விதங்கள், ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காலம் போய், இப்பொழுது பெண்களும் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்ச்சி, தெரியவரும்போது, பெண்கள் வெறியர்களாகி, கொலை செய்யத் துணிவது, அப்படியே நடப்பது, இப்படித்தான் தமிழகத்தில் பல செய்திகள் வருகின்றன என்பதைவிட, நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மனங்கள் அந்த அளவிற்கு வக்கிரமாகி, மணங்களை முறிக்கும் அளவிற்குச் சென்று, இடையில் வரும், வந்துள்ள புருஷன்களை ஒழித்துக் கட்டும் அளவிற்கு பெண்மை முன்னேறியுள்ளது,!

இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களும்   பாதிக்கப்படுகின்றன.  கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி—கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.  கூட்டுக்குடும்பங்கள் சிதறியபிறகு, உள்ள உறவுகளும், இவ்வாறு பாதிக்கப்படுவது, சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என கூறுகிறார்  சமூக செயற்பாட்டாளர் ஒருவர்.

– மணிகண்டன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.