மலைவாழ் பழங்குடியினரிடம் லஞ்சம் வாங்கிய துறையூர் பிடிஓ பணியிடை நீக்கம்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை!
மலைவாழ் பழங்குடியினரிடம் லஞ்சம் வாங்கிய துறையூர் பிடிஓ பணியிடை நீக்கம்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை!
திருச்சி மாவட்டம்,துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான மணிவேல் பசுமை வீடுகளுக்கு , பழங்குடியின மக்களிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
துறையூர், பச்சமலை, வண்ணாடு ஊராட்சியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களுக்காக , பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்ட 10 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் தலா ரூ 3000 வீதம் கூடுதல் தொகை ரூ. 15000த்தை துறையூர் பிடிஓ மணிவேலிடம் வழங்கிய போது அவர் கூடுதல் தொகையை பச்சமலைக்கு தான் வரும் போது கொடுக்குமாறு கூறுவது போன்றும், பயனாளிகள் இந்த தொகைக்குள் முடித்துக் கொடுக்குமாறு கேட்பது போலவும், அருகிலிருந்த ஒருவர் அதெல்லாம் சார் இதுக்குள்ளேயே பார்த்து செய்வார் என்று கூறுவது போலவும் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வேகமாக பரவியது.
இந்த செய்தி நமது அங்குசம் வெப் செய்தியிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரிடையாகவிசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விசாரணை முடிவில், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவேல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.