துறையூர் ஆபீசர்ஸ் ரெக்ரியேஷன் கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டம்: அத்துமீறிய ஆட்டம் முடிவுக்கு வந்தது!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

துறையூர் ஆபீசர்ஸ் ரெக்ரியேஷன் கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டம்: அத்துமீறிய ஆட்டம் முடிவுக்கு வந்தது!

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய அதிகாரிகள் பணி முடித்து ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடமானது, 1938ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் , ” ஆபீசர்ஸ் ரெக்ரேஷன் கிளப்” என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சமீப காலமாக கட்டப்பட்டுள்ள இடம் அரசு வருவாய் துறையின் கீழ் இருப்பதாக தெரியவந்தது. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த துறையூர் ஆபீஸ் ரெக்ரேஷன் கிளப் துறையூர் வட்டாட்சியர் புஷ்பராணி தலைமையில், நகராட்சி ஆணையர் முனைவர் முருகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் போலீசாரின் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரம் கொண்டு கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

3

மேலும் இடிப்பதற்கு முன்பு கட்டிடத்தின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வெளியில் எடுத்து வைக்கப்பட்டது . பீரோ, லாக்கர், எல்சிடி டிவி மற்றும் விளையாட்டு உபகரணங்கள், டேபிள், சேர்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றினர்.

அப்போது உள்ளே உயர்ரக காலி மது மதுபாட்டில்கள், சீட்டு கட்டுகள், மது அருந்தும் கண்ணாடி டம்ளர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

4

இந்த கிளப்பில் துறையூர் முக்கிய விஐபிகள், அரசு ஒய்வு பெற்ற அதிகாரிகள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் , இதில் உள்ளவர்கள் பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்களான டேபிள் டென்னிஸ் , கேரம் போர்டு, செஸ் போர்டு உள்ளிட்டவைகள் இருந்தாலும், மது அருந்துவதும், பணம் கட்டி சீட்டு விளையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் மது விற்பனையும் நடந்துள்ளதாம். இப்படியாக உல்லாச விடுதி போல் செயல்பட்டு வந்த ஆபிசர்ஸ் கிளப் தற்போது மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது கிளப் உறுப்பினர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பணி நிமித்தமான மனச்சுமையில் , பொழுது போக்கிற்காக செயல்பட்டு வந்த, ” பொழுதுபோக்கு கிளப்” பின் அத்துமீறிய சில செயல்பாட்டினாலும் , அது மேலிடத்திற்கு புகாராக செல்ல, தற்போது மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் தரைமட்டமானது எனவும் கூறப்படுகிறது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் திடீரென இடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.