கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி ! போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர்

0

கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி!  போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர்

திருச்சி, கிராப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த மே2ம் தேதி தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், “குடும்பத்துடன் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும். அதுவரை குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்” என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் வந்து, கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். ‘ஏன் கருணை கொலை கேட்கிறார்கள்’ என்று அறிய நாம் அந்த மனுவை பெற்று படித்தோம். மனுவின் சாராம்சம் இது தான்.

2 dhanalakshmi joseph

வீடியோ லிங்

 

- Advertisement -

- Advertisement -

கத்தார் நாட்டில், உள்ள வசந்த பவன் கிளையில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வந்த ரவி, புதிதாக கட்டப்படும் தனது வீட்டின் கட்டுமானப் பணியினை பார்வையிட விடுமுறை அளிக்காததால், நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் ஊர் திரும்பியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த வசந்த பவன் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் வி.கோவிந்தராஜீலுவின் துணையுடன் திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குரு ஹோட்டலில் உள்ள அறையில், ரவி மற்றும் அவரது மனைவி விஜயராணி ஆகிய இருவரையும் அடைத்து வைத்து, அடித்து உதைத்து ரூ.15 லட்சம் வரை பறித்துக் கொண்டதோடு வெற்றுக் காசோலைகள் மற்றும் வெள்ளைத் தாள்களில் கையெழுத்து பெற்றதோடு, கட்டப்படும் புதிய வீட்டை அவர்களது பெயரில் பத்திரப்பதிவு செய்து தருமாறு மிரட்டியதால், அவர்களை எதிர்த்து வாழ முடியாததால் தான் தாங்கள் கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு கோரிக்கை மனு வழங்கியதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

VASANTHA BAVAN RAVI-1
வசந்த பவன் ரவி

அம்மனுவின் மூலம் ரவியின் நிலையை அறிந்து கொண்ட நாம், தமிழகத்தில் உணவகத் தொழிலில் பெயர் பெற்ற ஒரு உணவக நிர்வாகம் ஏன் தங்கள் ஊழியர் ஒருவருக்கு இத்தகைய அநீதியை இழைத்தது என்பதை அறிய வசந்த பவன் உரிமையாளர் ராஜேந்திரனை சந்தித்து பேசினோம். அப்போது புகாரில் கூறப்படும் வி.கோவிந்தராஜீலுவும் உடனிருந்தார். இருவரும் நடந்த விஷயங்களை நம்மிடம் அப்போது கூறியதாவது,

வீடியோ லிங்

 

 

வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன்
வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன்

“வசந்த பவனுக்கு இலங்கை, துபாய், கத்தார் என பல்வேறு நாடுகளில் 21 கிளைகள் உள்ளன. இவற்றில் சுமார் 450 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். கத்தார் நாட்டில், தோஹா சிட்டி, வக்ரா என்ற இடத்தில் உள்ள வசந்த பவன் கிளையில் தான் எங்கள் மீது குற்றம்சாட்டும் ரவி என்பவர் மேற்பார் வையாளராக பணிபுரிந்தார். ஆரம்பத்தில், அதாவது 2010ம் ஆண்டில் சப்ளையராக வேலையில் சேர்ந்த ரவி பின்னர் படிப்படியாக உயர்ந்து மேற்பார்வையாளரானான். அப்போது அவனுக்கு 2200 திராம் சம்பளம். அதாவது இந்திய மதிப்பில் 46,000 ரூபாய். அவனுக்கு ரெண்டு பெண் பிள்ளைகள். சம்பளத்தைத் தாண்டி அவர்கள் படிப்பு செலவிற்கும் பணம் கொடுத்துள்ளேன். பெண் பிள்ளை பூப்படைந்த போதும் என்னிடம் பணம் வாங்கினான். நான் அனைத்து கிளைகளுக்கும் நேரடியாக சென்று நிர்வாகம் செய்து வருகிறேன்.

வணிகர் சங்க பொது செயலாளர் கோவிந்தராஜீலு
வணிகர் சங்க பொது செயலாளர் கோவிந்தராஜீலு

கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக என்னால் பயணம் செய்ய முடியவில்லை. இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இவன் திடீரென வேலைக்கு வராமல் இருந்துவிட்டான். இது குறித்து அங்கு வேலை செய்யும் ஊழியர் என்னிடம் தெரிவித்ததோடு, தினப்படி நிர்வாக செலவிற்காக (PETTY CASH) வைக்கப்படும் ரூ.3 லட்சம் பணம் காணவில்லை என்றும், ரவியின் ரூமிற்கு சென்று பார்த்த போது அங்கு அவனது துணிகள், பாஸ்போர்ட் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

வீடியோ லிங்

இதையடுத்து நான் இது குறித்து மேல் விசாரணையில் இறங்கினேன். அப்போது ரவி இந்தியா திரும்பிவிட்டதாக தெரிய வந்தது. பொதுவாக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லும் ஊழியர்களின் பாஸ்போர்ட்டை, விசா மற்றும் ஸ்பான்ஸர் நிர்வாக நடை முறைக்காக பெற்றுக் கொண்டு அந்த வேலை முடிந்ததும் ஊழியரிடமே பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்துவிடுவோம். அதனால், அவன் கையில் பாஸ்போர்ட் இருந்ததால், எளிதாக இந்தியா வர முடிந்திருக்கிறது.

கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப கத்தார் வங்கி கொடுக்கும் குறியீடு எண்ணை (CODE NUMBER) பயன்படுத்த வேண்டும். எத்தனை வங்கியில் கணக்கு இருந்தாலும் கத்தாரிலிருந்து பிறநாட்டிற்கு பணம் அனுப்ப ஒரே குறியீடு எண் தான் வழங்கப்படும். நாங்கள் அவனின் வங்கிக் கணக்கை சோதித்த போது ஒரே நாளில் ரூ.45 லட்சம் பணத்தை அவனது மனைவி பெயருக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. அத்துடன் பத்து நாளைக்கு ஒரு முறை 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை அவனது மனைவி, மகள், மச்சான், மச்சினி ஆகியோர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியிருந்தான். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இது போல் ரூ.1 கோடியே 25 லட்சம் பணத்தை அவன் அனுப்பியிருந்தது தெரிந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

4 bismi svs

காலையில் 8 மணிக்கு வேலைக்கு வந்தால் இரவு 11 ஆகிவிடும். அதனால் பார்ட்டைம் வேலை எதுவும் பார்த்து சம்பாதிக்கும் வாய்ப்பு இல்லை. மேலும் எங்கள் ஸ்பான்சரில் வேலையில் இருப்பதால் வெளியில் எங்கும் சென்று வேலை செய்ய முடியாது. அதனால் கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு இல்லை.

பொதுவாக எங்களது வக்ரா கிளை அதிக விற்பனை நடக்கும் இடமாகும். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் இனிப்பு பலகாரங்களுக்குறிய பில்லை வாங்குவதற்கு கூட காத்திராமல் பணம் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். பில் போடாத பணத்திற்கு இரவு நேரத்தில் தான் பில் போட்டு கணக்கு முடிப்போம். மேலும் சப்ளையர்களுக்கு வாடிக்கையாளர்கள் தரும் டிப்ஸானது பொதுவாக ஒரு பெட்டியில் போட்டு வைக்கப்படும். வாரம் ஒரு முறை அதை சமையல் ஊழியர்கள் 35 சதவீதம் என்றும் சப்ளையர்கள் 65 சதவீதமாகவும் பிரித்துக் கொள்வார்கள். இது தான் நடைமுறை. இதில் அங்கு பணியாற்றும் துரை என்பவன் அந்த டிப்ஸ் பெட்டியிலிருந்து சிறுகச்சிறுக சுமார் 20 லட்சம் வரை பணத்தை திருடியது சிசிடிவி கேமிரா மூலம் கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். அங்கு குற்றங்களுக்கு தண்டனை கடுமையானது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனே தண்டனை தான். துரையின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவனுக்கு கத்தார் அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவனிடம் நடைபெற்ற விசாரணையின் போது திருட்டு சம்பவத்தில் ரவி குறித்தும் துரை கூறியிருக்கிறான். இதை அறிந்ததும் தான் ரவி, ‘நாமளும் சிக்கிக் கொள்வோம்’ என்ற பயத்தில், யாருக்கும் சொல்லாமல் இந்தியாவிற்கு ஓடிவந்துவிட்டான் என்பதை நாங்கள் அனுமானித்தோம்.

 

மனைவி விஜயராணி மற்றும் மகள்களுடன் புகாரளித்த ரவி

 

பொதுவாக மாதாமாதம் ரவி சம்பளம் வாங்கும் போது அந்த பணத்தை சகஊழியரை அனுப்பி வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்வான். ஆனால் திருடிய பணத்தை இவனே வங்கிக்கு சென்று டெபாசிட் செய்துள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. நான் ஹோட்டலுக்கு சென்றால்  காரில் இறங்கும் போது ஓடிவந்து   என் காலில்விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பின்பே உள்ளே அழைத்துச் செல்வான். அப்படி ஒரு ஒழுக்கமான மனிதனாக தெரிந்ததால் தான் விற்பனை பணத்தை கையாளும் பொறுப்பையும் சேர்த்து ஒப்படைத்தோம். இப்படி செய்வான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரவியின் இந்த செயல் குறித்து கத்தார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த போது, ‘ரவி நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதால் புகாரை பெற முடியாது’ என்று கூறிவிட்டனர்.

ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்…

கடந்த மே5ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் விடியல் மாநாடு நடைபெற்றது. இக்கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேரமைப்பின் பொதுச் செயலாளரான வி.கோவிந்தராஜூலுவை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், “ரவியை அடித்த விவகாரம் பெரிதாகிறது. இந்த தகவல் வெளியே தெரிந்தால் நீங்கள் அந்த பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதே சிரமம். முதல்வர் ஸ்டாலின் கூட இந்த கூட்டத்திற்கு வருவதை புறக்கணித்துவிடுவார். அதனால் இந்தப் பிரச்சனையை பேசி முடித்துக் கொள்ளலாம். ரவிக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் கொடுங்கள். பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம்” என்றெல்லாம் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://youtu.be/ETdo9sq_AEQ

இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ம் தேதி திருச்சியில், அவன் வீட்டிற்கு கார் அனுப்பி அவனை வரவழைத்து விசாரித்தோம். வங்கியில் 45 லட்சம் பணப்பரிமாற்றத்திற்கான ஆதாரம், அடிக்கடி 3 முதல் 5 லட்ச ரூபாய் பணம் அனுப்பிய தற்கான ஆதாரத்தை காட்டி விசாரித்த போதே தான், ‘மாட்டிக் கொண்டோம்’.. என்பதை அறிந்து, ‘பணம் திருடியது உண்மை தான்’ என்பதை ஒப்புக் கொண்டான். இதையடுத்து மனைவியையும் வரவழைத்து விசாரித்த போது,  “புதுவீடு பால் காய்ச்சுவதற்கு நான் வரமாட்டேன். எனக்கு லீவு இல்லை என்று சொன்னவர் திடீரென வந்திருந்தார். ஏன்.. திடீரென வந்திருக்கிறீர்கள்.. என்ன காரணம்.. லீவு கொடுத்துவிட்டார்களா என்று கேட்டேன். லீவு கொடுக்கவில்லை. அதனால் வேலையைவிட்டுவிட்டு வந்துவிட்டேன் என்றார். அது தான் எனக்குத் தெரியும். இவ்வளவு பணம் பிரச்சனைகள் இருக்கிறது என்பது எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

கடந்த ஜனவரி 20ம் தேதி ரூ.45 லட்சம் மதிப்பில் பழைய வீடு ஒன்றை கிரையம் செய்திருந்தது தெரிய வந்தது. இந்திய மதிப்பில் 46 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் உனக்கு எப்படி 45 லட்சம் பணம் அனுப்ப முடிந்தது என்று விசாரித்த போது தான் வேறு வழியின்றி, வீடு கட்டவே பில் போடாத பணம், டிப்ஸ் பெட்டியில் கை வைத்தது என திருடிய விபரங்கள் அனைத்தையும் ஒப்புக் கொண்டான்.

இதையடுத்து அவனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் தற்போது இருக்கிறது எனக் கேட்டோம். மனைவி கணக்கில் ரூ.3 லட்சமும், தனது கணக்கில் ரூ.1 லட்சமும் இருப்பதாக கூறினான். இரண்டையும் எடுத்து வரச் செய்து வாங்கிக் கொண்டோம். பெடரல் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சியுபி மற்றும் ஐசிஐசிஐ வங்கி என  ஐந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறான் என்பதும் எங்களுக்கு அப்போது தான் தெரிந்தது. “மீதி பணத்தை எப்படி தருவாய்” என்று கேட்ட போது, ‘மீண்டும் என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். சம்பளத்தில், எடுத்த பணத்தை கழித்துவிடுகிறேன் என்று கூறியதோடு, நிர்வாகத்திற்கு துரோகம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். என் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டாம். போலீஸில் புகார் தர வேண்டாம்” என்று கெஞ்சினான். அதனால் நாங்கள் போலீஸில் புகார் கொடுக்காமல் விட்டுவிட்டோம்” என்றார்.

தொடர்ந்து வி.கோவிந்தராஜீலு நம்மிடம் கூறுகையில், “ரவியை கூப்பிட்டு விசாரித்தது பிப்ரவரி 5ம் தேதி. ஆனால் நாங்கள் அடித்ததாக கூறி புகார் கொடுத்ததோ பிப்ரவரி 27ம் தேதி. இத்தனை நாட்கள் ஏன் எங்கள் மீது புகார் கொடுக்கவில்லை. மேலும் ரவியை காரில் அழைத்து வந்து காரிலேயே கொண்டு போய்விட்டு வந்தோம். அவன் குரு ஹோட்டலில் இறங்குவதும், ஏறுவதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருக்கிறது. போகும் போது சாதாரணமாக நடந்து சென்று தான் காரில் ஏறுகிறான். அடித்து உதைத்திருந்தால் சாதாரணமாக நடந்து செல்ல முடியுமா..? மேலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றிருக்கலாமே..? அப்படியும் எதுவும் நடக்கவில்லையே..?

மனைவி, மகளுக்கு தெரிந்தால் அசிங்கம் என கெஞ்சியதால் தான் அவன் மீது எந்தவித புகாரும் தராமல் இருந்தோம். அவன் திருடிய பணத்தில் 4 லட்சம் தான் திருப்பி கொடுத்தான். மீதி பணத்தை கொடுக்காமல் தவிர்க்கவே இது போன்ற பொய்யான புகார்களை தவறானவர்களின் வழிநடத்தலின் பேரில் செயல்படுகிறான்.

ராஜேந்திரன் மீது போலீஸில் புகார் கொடுத்த போது அவர் நேரடியாக கமிஷனர் அலுவலகம் சென்று அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து தெளிவாக விளக்கம் அளித்துவிட்டார். எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லை என்பதால் காவல்துறை புகாரை பதிவு செய்ய

வில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்று புகார் பதிவு செய்திருக்கிறான். புகார் எங்கள் மீது கொடுத்துவிட்டு இப்போது அவன் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்திருக்கிறான். அவன் தவறே செய்யவில்லையென்றால் ஏன் நீதிமன்றம் சென்று முன்ஜாமீன் வாங்க வேண்டும்.

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கத்திடம் கேட்டபோது, ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. ரவி தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் முன்னுக்-குப்பின் முரணாக உள்ளது. ரவியின் பின்னணியில் இருந்து யாரோ தவறான வழியில் கருணைக்கொலை, போராட்டம் என வழிநடத்தி போலீஸ் மீது அவதூறு பரப்புகின்றனர்.

வசந்தபவன் நிர்வாகம், ரவி 1.35 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக  கூறிய புகாரையடுத்து ரவியின் வங்கிக்கணக்குளை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.