அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரவி தேஜா – வம்சி கை கோர்க்கும் ‘ டைகர் நாகேஸ்வரராவ் ‘ டிரைலர் ரிலீஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்திய திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது !!

இன்னும் 17 நாட்களில் புலியின் வேட்டை தொடங்குகிறது. மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும், ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் வகையில் மிகவும் தேடப்படும் திருடர்களின் தளமான ஸ்டூவர்ட்புரத்தின் ஆபத்தான உலகத்திற்கு பார்வையாளர்களை கொண்டு செல்லும் ஒரு அற்புதமான டிரெய்லருடன் வந்துள்ளனர். மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கொள்ளையடிப்பதற்கு விதிகள் இருக்கும் நிலையில் நாகேஸ்வரராவின் வருகை அனைத்தையும் மாற்றுகின்றது. நாகேஸ்வரராவிற்கு பெரும் அதிகாரப் பசி, பெண்களின் மீது பேராசை, பண ஆசை. ஒருவரைத் தாக்கும் முன் அல்லது எதையாவது கொள்ளையடிக்கும் முன் எச்சரிக்கை கொடுப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இருப்பினும், நாகேஸ்வர ராவை ஒழிக்க ஒரு பலமான போலீஸ்காரர் முயல்கிறார். ஸ்டூவர்ட்புரம் நாகேஸ்வர ராவின் கதை அவரது கைதுடன் முடிந்தது, ஆனால் டைகர் நாகேஸ்வர ராவின் கதை அங்கிருந்து தொடங்குகிறது.  தேசிய அச்சுறுத்தலாக மாறும் டைகர் நாகேஸ்வர ராவின் இரத்தம் தோய்ந்த வேட்டை பிரமிப்பானது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

டிரெய்லரின் இரண்டரை நிமிடங்கள் நாகேஸ்வர ராவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணங்களைக் காட்டுகிறது. ரவிதேஜா இளமையாகவும், சுறுசுறுப்பாகவும், காட்டுமிராண்டியாகவும், மிருகத்தனமாகவும், என பல விதங்களில் தோன்றுகிறார். நாகேஸ்வர ராவாக அவரது மாற்றம் நம்பமுடியாத வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர், ரேணு தேசாய், அனுபம் கெர், நாசர், ஜிஷு சென்குப்தா, ஹரீஷ் பெராடி மற்றும் முரளி ஷர்மா ஆகியோருடன் பல முக்கிய நடிகர்கள் இப்படத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கின்றனர்.

டைகர் நாகேஸ்வர ராவ் ஒரு அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் வம்சி தன் தனித்துவமான கதை சொல்லலில், ரவிதேஜாவை இதுவரை பார்த்திராத புதுமையான தோற்றத்தில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் தயாரிப்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகிறது, இப்படத்தின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் அற்புத இசையில், R மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிகர்களுக்கு அற்புத விருந்தாக அமைந்துள்ளது. கடந்த காலத்தில் நடக்கும் கதையில் அவினாஷ் கொல்லாவின் கலை இயக்கம் குறிப்பிடத் தக்கது. ஸ்ரீகாந்த் விசாவின் வசனங்கள் மிக பவர்புல்லாக அமைந்துள்ளது.

படத்தின் பிரம்மாண்டத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது டிரெய்லர். படத்தின் இணை தயாரிப்பாளர் மயங்க் சிங்கானியா பணியாற்றுகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய், அனுபம் கெர் மற்றும் பலர்

எழுத்து – இயக்கம் : வம்சி
தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா வசனம்: ஸ்ரீகாந்த் விசா
இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : R மதி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங்க் – ஃபர்ஸ்ட் ஷோ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.