அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மொழி வாரி இட ஒதுக்கீடு … தமிழகத்துக்கு 5 தலைநகரம் … என்ன சீமான் இதெல்லாம் ?

திறந்த மடல் - 12

திருச்சியில் அடகு நகையை விற்க

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு, சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல்களில் தனித்து நிற்பதையே கொள்கையாகக் கொண்டுள்ள உங்களுக்கு நம் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்வோம்.

எதிர்வரும் 2026 தேர்தலையொட்டி, கட்சியின் செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதில், “இப்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையை அண்ணல் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் கட்சி சீராய்வு செய்யும்’ என்கிறீர்கள். அப்படி என்ன சீராய்வு என்றால் ’சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்குப் பதிலாக ‘மொழிவழிக்குடிகள்’ அடிப்படையில் இடஒதுக்கீடு என்கிறீர்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“இட ஒதுக்கீடு தமிழ்ச்சாதிகளுக்கு இடையே சாதிவேறுபாட்டை வளர்க்கிறது’ என்னும் ‘நாம் தமிழர் கட்சி’யின் குரல், ‘இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது’ என்னும் அப்பட்டமான சாதியவாதிகளின் குரல்.

சீமான்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம் என்று பிரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இவர்கள் சொல்லும் ‘தமிழ்க்குடிகள்’, ‘தெலுங்குக்குடிகள்’, ‘கன்னடக்குடிகள்’ என்று எல்லாம் உண்டு. ‘தெலுங்குக்குடிகள்’, ‘கன்னடக்குடிகளு’க்கு மட்டும் முன்னுரிமை என்று எங்கே இருக்கிறது? தமிழ் பேசுவதாலேயே எந்தச் சாதியும் இடஒதுக்கீட்டில் ஒதுக்கப்படுவதில்லை. இது, இந்துத்துவச் சக்திகளின் குரல்தான். அதற்கு அம்பேத்கரைத் துணைக்கழைப்பது அநீதி” என்று எழுத்தாளர் சுகுணா திவாகரன் போட்டுடைத்திருக்கிறார்.

Trich Job

மொழி வழி இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஒருவேளை, மொழி வழி இடஒதுக்கீடு அமலுக்கு வர வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தின் மக்களவையில் 3 இல் 2 பங்கு பெரும்பான்மை பெற வேண்டும். அப்போதுதான் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரமுடியும். இந்த அடிப்படை கூட, தெரியாத தற்குறி அரசியல்வாதியல்ல நீங்கள். தர்க்கமாகவும், ஆணித்தரமாகவும் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். ஆனாலும், இப்படி ஒரு அபத்தமான திட்டத்தை உங்களால் எப்படி முன்மொழிய முடிந்தது? இதை போகாத ஊருக்கு வழி சொல்லும் வேலை என்பார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திராவிடம் என்ற கோட்டைய  உடைக்க தமிழ்த் தேசியம் பேசும் நீங்கள்  ‘பிராமண கடப்பாரை’ எடுப்பேன் என்று கூறி பார்ப்பனர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டீர்கள். உங்கள் வேட்பாளர் பட்டியலில் 4 பேர் பார்ப்பனர்கள் என்று சாதியை வெளிப்படையாகவே கூறியிருப்பதுதான் தமிழ்த் தேசியமா? புரியவில்லை சீமான்.

அடுத்து, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்திருக்கிறீர்கள். அதுதான், கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளில் பாஜக நிறைவேற்றிவிட்டதே? தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கும் ரயில்வே நிர்வாகத்தை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும்; தமிழ்நாட்டுக்கு ஐந்து தலைநகரம் என்பதையெல்லாம் படிக்கும்போது, எவ்வளவு முயன்றும் சிரிப்பை மட்டும் அடக்கமுடியவில்லை சீமான். இதைவிட இன்னும் ஒரு சிறப்பு திட்டம் ஒன்று இருக்கிறது. குளிர்காலத்தில் ஜம்மு கோடை காலத்தில் காஷ்மீர் என்று ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் தனிச்சிறப்பான தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடைமுறை இருப்பதையும்; பஞ்சாப், ஹரியாணா என்னும் இரு மாநிலங்களுக்கு சண்டிகர் என்ற ஒரு தலைநகரம் இருப்பதையும் அறிந்திருக்கிறோம். அது என்ன தமிழகத்துக்கு மட்டும் 5 தலைநகரம்?

சரி, கிடக்கட்டும். இலங்கை இராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படும் தமிழ் மீனவர்களைக் காக்க நெய்தல் படையைக் கட்டமைப்பது பற்றி செயல்திட்டத்தில் ஒருவரிகூட இல்லையே, மறந்துவிட்டீர்களா சீமான்?

“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று அண்ணா சொன்னதை அப்படியே மாற்றி “மாநிலத்தில் தன்னாட்சி… ஒன்றியத்தில் கூட்டாட்சி’என்கிறீர்கள். சுயாட்சிக்கும் தன்னாட்சிக்கும் அப்படி என்ன வேறுபாடு?

நடைமுறைப்படுத்தவே வாய்ப்பில்லாத கற்பணை புனைவுகளுக்கு பெயர் கட்சியின் செயல்திட்டமா? ஒருவேளை எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, மக்கள் இன்புறட்டுமே என்று உங்களுக்கே உரிய நகைச்சுவையாய் அடித்துவிடுவோமே என்று அடுக்கிவிட்டீர்களோ? நம்மள இன்னுமா, இந்த உலகம் நம்பிட்டு இருக்குனு வடிவேலு பாணியில், கேட்கத்தான் தோன்றுகிறது, உங்களது கட்சியின் செயல்திட்ட அறிவிப்புகள்!

 —    ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.