செங்கலால் தாக்கி கொலை ! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை !
திருச்சிராப்பள்ளி மாவட்டம். வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தெற்கு சித்தாம்பூர், அரிஜன தெருவை சேர்ந்த மருதை 50/21. த.பெ பொன்னம்பலம் என்பவருக்கும். அதே தெருவை சேர்ந்த செந்தில் 44/21, த.பெ ஆறுமுகம் என்பவருக்குமிடையே அவர்களது விவசாய நிலத்திற்கு கால்வாயிலிருந்து குழாய் மூலம் நீர் பாசனம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 24.09.2021-ம் தேதி தெற்கு சித்தாம்பூர் வேப்ப மரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்த மேற்படி மருதை 50/21. த.பெ பொன்னம்பலம் என்பவரை. எதிரி செந்தில் 44/21, த.பெ ஆறுமுகம் என்பவர் அங்கிருந்த சிமெண்ட் செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி இறந்து போன மருதை என்பவரின் மனைவி புஷ்பா 42/21 என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி எதிரி மீது வாத்தலை . 327/21, U/s 294(b), 302 IPC @ 294(b), 302, 109 IPC 6T L வழக்கு பதிவு செய்யப்பட்டு. மேற்படி வழக்கில் A1) செந்தில் 44/21, த.பெ ஆறுமுகம். A2) சேட்டு 42/21 த.பெ. ஆறுமுகம் மற்றும் A3) பவானி 37/21 க.பெ சேட்டு ஆகியோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (21.07.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II) எதிரி-1 செந்தில் 44/21, த.பெ ஆறுமுகம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 1000 அபராதமும், எதிரி-2 சேட்டு 42/21 த.பெ. ஆறுமுகம் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையிலும்,எதிரி-3 பவானி 37/21 க.பெ சேட்டு என்பவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக வாத்தலை காவல் நிலைய ஆய்வாளர் இசைவாணி மற்றும் வாத்தலை காவல் நிலைய நீதிமன்ற தலைமை காவலர் ஜெகநாதன் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.