கழிவுநீர், குப்பை , துர்நாற்றம் அல்லாடும் மக்கள் ! திருப்பத்தூர்  எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பாரா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கழிவுநீர், குப்பை , துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர் ! நடவடிக்கை எடுக்குமா திருப்பத்தூர்  நகராட்சி ? மழைநீரோடு கழிவுநீர் தேங்கி, தீவு போல் காட்சியளிக்கும் ஆரிப் நகர் , நடவடிக்கை எடுக்குமா திருப்பத்தூர் நகராட்சி ?

கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து நிற்கும் கழிவுநீரோடு குப்பைகள் கலந்து அழுகி  துர்நாற்றம் வீசுவதால், மாணவர்களும் பகுதி மக்களும் முகம் சுளித்தபடியே அந்த இடத்தைக் கடந்து செல்கின்றனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்
துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்

திருப்பத்தூர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள பெரிய ஏரி தெற்குப்புறம்  தாழ்வு பகுதியில் அமைந்துள்ளது  “ஆரிப்நகர்” , இப்பகுதியில் பல ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள் நகரின் கடைக்கோடியில் இப்பகுதி உள்ளதால் மற்ற பகுதிகளில் வழிந்தோடும் மழை நீர் அவ்வப்போது ஆரிப் நகரை சூழ்ந்து கொள்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் குப்பைகளாலும் மண் சரிவுகளாலும் கழிவு நீர் கால்வாய்களில்  அடைப்பு ஏற்படுத்தி  மழைநீர் செல்ல வழி வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய் தொற்று ஏற்படுகிறது , தவ்ஹித் ஜமாத் மசூதி பின்புறமும் ,எஸ்கே நகர் , விவி புதிய மசூதி விஎஸ் நகர் , போன்ற தெருக்களில் கழிவு நீர் வெளியேறி மழைநீரோடு தேங்கி உள்ளது.

துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்
துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது,

ஆரிப் நகர்  முதல் அருகில் உள்ள மாடப்பள்ளி ஓடை  வரை , கழிவுநீர் கால்வாய்களில் தூர் வாரினால்  கழிவு நீர் வெளியேறிவிடும்,  என மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்ல என்று அங்கலாய்கிறார்கள்.

எம்.எல்.ஏ. நல்லதம்பி
எம்.எல்.ஏ. நல்லதம்பி

தற்போது , திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும்  மழையால் மற்ற பகுதிகளில் உள்ள கழிவு நீரும்  குப்பைகளும் அடித்து வரப்பட்டு இங்குள்ள  குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டு  தனித்தீவு போல காட்சியளிக்கிறது என்கிறார்கள்.

தங்களுடைய குடியிருப்புகளில்  பூரான், பாம்புகள் பூச்சி என அனைத்தும் உள்ளே நுழைந்து விடுகிறது , இங்கு வாழவே பயமாக உள்ளது இந்த பகுதியை சுத்தம் செய்ய சொல்லுங்கள் அண்ணா என பள்ளிக்கு சென்ற மாணவன் கோரிக்கை வைத்தான்.

துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்
துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்

அப்பகுதி சேர்ந்த பெண்மணி  ஒருவர் கூறுகையில் , எப்படித்தான் இந்த இடத்தில் குப்பை வருகிறது என்று தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் இந்த இடத்தைச் சுத்தம் செய்தாலும், மீண்டும் குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மழை வரும் போது குப்பைகளும் அடித்து வரப்பட்டு இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களுக்கு அடித்துச் சென்று அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது, அதனால் நாள் பட்டு தேங்கி நிற்பதால் துர்நாற்றமும், கூடவே நோய்த் தொற்றும் ஏற்பட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கலந்த மழைநீரை அக்கற்றி இந்த இடத்தைச் சுத்தம் செய்து, இங்கு குப்பைகளைக் கொட்டுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்” என்றார்.

சாலையோரம் வீசப்பட்டுள்ள குப்பைகள் தேங்கி நிற்கும் கழிவுநீரோடு கலந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முகம் சுளித்தபடியே அந்த இடத்தைக் கடந்து செல்வதையும் , சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.

துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்
துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்

இது குறித்து நகராட்சி துப்பரவு அலுவலக அதிகாரி முகமது இக்பாலிடம் பேசினோம்.

நீங்கள் குறிப்பிடும் பகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாகவும் குலமாகவும் இருந்திருக்கு சார் , காலப்போக்கில் விளை மனைகளாக மாற்றப்பட்டதால் மக்கள் குடியேறி விட்டார்கள் , தற்காலிகமாக தேங்கி நிற்கும் தண்ணீரை துணை சேர்மன் சொந்த செலவில் நீர் உறிஞ்சும் எந்திரம் மூலம் அகற்றபட்டு வருகிறது.

சுமார் 30 லட்ச ரூபாயில் வர்மன் திட்ட நிதியில் (underground drainage ) பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்திட்டு இருக்கோம் சார் , இந்த திட்ட பணி மூன்று மாதங்களில் முடிந்து விடுவதால் நீங்கள் குறிப்பிடும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டு விடும் என்றார்.

துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்
துர்நாற்றம் அல்லாடும் ஆரிப் நகர்

அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்  இக்பால் கூறுகையில்

ஆரிப்நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுவதும் தூர் வாரப்பட்டு நகரின் பின்பகுதியில் உள்ள தவ்ஹித் மசூதி வரை புதிய கால்வாய் செயல்படுத்தி , அனேரி பகுதிக்கு செல்லும் நீரோடையில் இணைக்கப்பட்டால் கிட்டத்தட்ட 70%  பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

சமூக ஆர்வலர்,  முகமது இக்பால்
சமூக ஆர்வலர், முகமது இக்பால்

திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி இந்த திட்ட பணிக்கு ஒரு லட்சம் கொடுத்து உள்ளார். இன்னும் இரண்டு லட்ச ரூபாய் வரை கொடுத்து உதவு வேண்டும் என கோரிக்கையும் வைத்தார்.

– மணிகண்டன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.