அடடே … இப்படி ஒரு திட்டமா ? திருப்பத்தூர் எஸ்.பி.யின் அசத்தல் ஐடியா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

போலீஸ் அக்கா” திட்டத்தின்  கீழ் பெண் காவலர் அக்கா  நேரடியாக தலையிட்டு 90 சதவீத பிரச்னைகளை களைந்து விடுவார். தீவிரமான பிரச்னைகள் மட்டுமே வழக்காக பதிவு செய்வார்.

பாலியல் தொந்தரவை எதிர்கொள்ளும் பெண்கள் போலீசை எளிதில் தொடர்புகொள்ளவும் தீர்வு காணவும் “போலீஸ் அக்கா” என்றொரு புதுமையான திட்டத்தை தனது மாவட்டத்தில் அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறார், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிச-18 அன்று நடைபெற்ற இத்திட்டத்தின் அறிமுக விழாவுக்கு தலைமையேற்று திட்ட அறிமுக உரையாற்றிய காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, போலீஸ் அக்கா” போன் (app) செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார்.

மேலும், “பாலியல் தொல்லைகளை  கண்டறிந்து அதை கிள்ளியெறிவதுதான் ‘போலீஸ் அக்கா’ திட்டம். கல்லூரி மாணவிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இத்திட்டம்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இத்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள , அனைத்துக்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்  ஒரு மகளிர் காவலா் தொடா்பு அலுவலராக நியமிக்கப்படுவார். புகார் வந்தால் கல்லூரிக்கு செல்லவும், புகார் இல்லாத நேரங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை கல்லுாரிக்குச் செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அவர்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன. இவர்களின் பெயர், தொடர்பு எண்களுடன் கூடிய விபரங்களைக் கொண்ட ‘க்யூ ஆர்’ கோட், (QR Code) கல்லுாரிகளில் ஆங்காங்கே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மாணவிகள் தங்களது பிரச்சினைகளை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புகார் மூலம் மாணவிகளுடன் பெண் காவலர் கலந்துரையாடுவார். உளவியல், பாலியல் ரீதியிலான பிரச்னைகளாக இருந்தாலும் கேட்டறிவார். அதில் தொடர்புடைய துறையினர், நிபுணர்களிடம் கலந்தாலோசித்து தக்க தீர்வு காண்பார். ஆலோசனைகள் வழங்குவார். “உற்ற சகோதரியாக”  மாணவிகள் பகிரும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பார்.  காதல் விவகாரம், தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள் போன்ற விஷயங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள மாணவிகளுக்கு உதவுவார் இந்த  “போலீஸ் அக்கா ” ( செயலி )” என்பதாக அறிமுக உரை நிகழ்த்தினார்.

தமிழகத்திலும் ஆங்காங்கே நடக்கும் பாலியில் குற்றங்கள் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்துகின்றன. இப்படியான காலகட்டத்தில் “போலீஸ் அக்கா,  மாணவிகளுக்கும் பெற்றோருக்கு பெரும் ஆறுதல்தான்.

 

– மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.