அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருவண்ணாமலை ‘கிரி ‘ வலம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நகரத்திலிருந்து சுமார் 20கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழையனூர் கிராமம். திருவண்ணாமலை மேற்கு ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள கிராமத்தில் நேற்று நடைபெற்ற திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களும் சம அளவில் திரண்டு இருந்ததுடன் அவரவர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் வந்திருந்தனர். திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் எல்லைப் புறமாக இருக்கிறது பழையனூர். அதனைத் தாண்டினால் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி வந்துவிடும்.

திருவண்ணாமலையில் இருந்து நெடுஞ்சாலையில் பயணித்து கிராமப் பாதையில் திரும்பி கூட்டம் நடந்த இடத்திற்கு சென்ற போது, இசைக்குழுவினர் கொள்கைப் பாடல்களை மிக அருமையாக பாடிக் கொண்டிருந்தனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வீரபத்திர சாமி கோவில், அதனை ஒட்டிய திடல், சில மரங்கள், வானத்தில் நிலா என திராவிட மாடல் ஆட்சியைப் போலவே இனிமையான சூழலில் கிராமத்து மக்களிடம் பேசுகின்ற நல் வாய்ப்பு அமைந்தது.

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை “டிவி சீரியல் பார்க்கப் போகணுமா?” என்று கேட்டேன். “பேசி முடித்ததும் போறோம்” என்றார்கள். அடுத்த சீரியல் தொடங்கும் முன்பு போய் விடலாம் என்று சொல்லி, அவர்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கினேன்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

விடுபட்ட சீரியலின் கதையை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்போது, இந்த மேடையில் சொல்லப்பட்ட செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை வைத்தேன். கைத்தட்டல் மூலம் ஏற்றுக் கொண்டார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர்கள் ரமணன், சந்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலைமணி, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் அன்பு தம்பி மங்கலம் பிரபாகரன்,  பழையனூர் கழக முன்னோடிகள் அனைவரும் ஒருங்கிணைந்து நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது திருவண்ணாமலையில் கிரிவலத்திற்காக மக்கள் வந்து கொண்டு இருந்தனர். கிராம மக்களை வலம் வந்த மகிழ்வுடன் விடுதி அறைக்கு வந்தோம்.

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை முந்தைய நாள், பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்த கழக நிர்வாகிகளிடம், “கூட்டம் நடக்கும் இடம் எவ்வளவு தூரம்?” என்றேன். “இங்கிருந்து (திருவண்ணாமலையிலிருந்து) செங்கம் எம்.எல்.ஏ ஆபீஸ் ஒரு 35 கிலோ மீட்டர். அங்கிருந்து ஒரு 25 கிலோ மீட்டர்” என்றார்கள். எம்.எல்.ஏ அலுவலகம் செல்லும்போதே நன்றாக இருட்டிவிட்டது. ஈரக்காற்று சிலுசிலுத்தது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோததர் மு.பெ.கிரி தனது நகரத்தில் நடைபெற்ற பெருமாள் கோவில் குடமுழுக்கிற்கானப் பணிகளில் விறுவிறுப்பாக இருந்தார். செங்கம் ஜமாத் முஸ்லிம் மக்கள் சீர்வரிசையுடன் வந்து பெருமாள் கோயிலில் அவற்றை ஒப்படைக்கும் பணியை ஒருங்கிணைந்து முடித்துவிட்டு, அலுவலகம் வந்த எம்.எல்.ஏ, வழக்கமான அன்புடன் வரவேற்றார்.

தேநீர் நேரத்தில், தன் போனை பார்த்தார். யாருக்கோ போன் செய்தார். “கோயில் கும்பாபிஷேக விளம்பர டிசைனிலே பெரியார்-அண்ணா-கலைஞர் படம் இல்லையே.. மூணு பேரு படத்தையும் மேலே வைங்க. அவங்கதான் நமக்கு முதல் கோயில்” என்று சொல்லிவிட்டு, ‘சரிதானே’ என்பதைப் போல என்னைப் பார்த்தார். புன்னகைத்தபடி, அவருடன் பொதுக்கூட்டத்திற்குப் புறப்பட்டேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

போய்க்கொண்டே இருந்தோம். கூட்டத்துக்கு அழைச்சிட்டுப் போறாரா? வனச் சுற்றுலா போறாரா? என்ற குழப்பம்.  இருபுறமும் மரங்கள் அடர்ந்த பாதையில் பயணித்தோம். கருத்த தார்ச்சாலை கார் முகப்பு விளக்கில் பளபளத்தது. “நாலு வருடத்தில் பெரும்பாலும் எல்லா கிராமங்களுக்கும் ரோடு போட்டாச்சுங்க தோழர். இதோ இந்தப் பாலம் போன வருசம்தான் முடிச்சோம். இங்கே பாத்தீங்களா.. இந்த ஸ்கூலை ஹைஸ்கூலா மாத்தியிருக்கோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்துல வீடு கொடுத்திருக்கோம். லோன் வாங்கிக் கொடுத்திருக்கோம். அடிப்படை வசதிகளை செஞ்சி கொடுத்திருக்கோம். பெரும்பாலும் எல்லா கோயிலுக்கும் கும்பாபிஷேகம் பண்ணிட்டோம்” என்றார் எம்.எல்.ஏ.

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை கார் கண்ணாடியின் மீது தூறல்கள் விழ, வைப்பர் இங்குமங்கும் அசைந்தது. “மழையில் கூட்டத்தை நடத்த முடியுமா?” என்று உடன்வந்தவர்கள் கேட்க, “பாத்துக்கலாம்” என்றார் சட்டமன்ற உறுப்பினர். கூட்டம் நடக்கும் இடத்திலும் மழை பெய்வதாகத் தகவல் வந்தது. மாற்று ஏற்பாடுகள் செய்வதாக அங்கிருந்த நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர். வழியில், நீப்பத்துறை என்ற இடத்தில் காரை நிறுத்தச் சொன்னார் சட்டமன்ற உறுப்பினர். தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள கிராமம். இந்த பக்க ஆற்றங்கரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி. அந்தக் கரை தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி.

நீப்பத்துறை பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. பக்கத்தில் இருந்த டீக்கடைக்காரர் அந்த மழைநேரத்திற்கேற்ப அருமையான ஃபில்டர் காபி கொடுத்தார். 10 நிமிட நேரத்தில் பலரும் வந்து எம்.எல்.ஏ.விடம், என்னென்ன பணிகள் நடந்திருக்கிறது, என்னென்ன தேவை என்பதைத் தெரிவித்தனர். எல்லாவற்றுக்கும் பதில் சொன்னபிறகு பயணம் தொடர்ந்தது.

பொதுக்கூட்டம் நடந்த இடம் இளங்குன்னி கிராமம். பட்டியல் இன-பழங்குடி மக்கள் அதிகம் வாழும் முழுமையான கிராமப் பகுதி. ஆண்களும் பெண்களுமாகத் திரண்டிருந்தனர். வேட்டுச் சத்தத்துடன் வரவேற்றனர். மழை விட்டிருந்ததால், எம்.எல்.ஏ தனது தலைமையுரையில் தொகுதிக்கு நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு, சுருக்கமாக முடித்துவிட்டு, எனக்கு வழிவிட்டார்.

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை மைக் முன் நின்றபோது மீண்டும் தொடர் வேட்டு சத்தம். அந்த சத்தத்திற்கிடையே, “நான்காண்டு சாதனைகளுக்கான இந்த வேட்டு சத்தம், அடுத்த ஐந்தாண்டு ஆட்சிக்கான வாக்கு சத்தமாக மாறவேண்டும். ஓட்டு மெஷினில் நீங்கள் சூரியனுக்கு வாக்களிக்கும் போது கேட்கும் பீப் சத்தம்தான் வெற்றியின் சத்தம்” என்று சொல்லி அவர்களின் ஆரவார வரவேற்புடன், திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியின் மகத்தான திட்டங்களையும் அது ஏற்படுத்தியுள்ள பயன்களையும் விளக்கினேன். சற்று நேரத்தில், மழை வலுத்தது.

எதிரில் உட்கார்ந்திருந்த பொதுமக்களை ஓரமாக இருந்த ஒரு மண்டபத்திலும், வீடுகளின் முன்பகுதியிலும் ஒதுங்கச் சொல்லி, “நீங்கள் யாரும் மழையில் நனைய வேண்டியதில்லை.  வெயிலிலல் காய வேண்டியதில்லை. இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் என்பதுபோல உங்கள் காதுகளைத் தேடி கருத்துகள் வரும். அதை நீங்கள் மற்றவர்களிடம் சொன்னால் போதும்” எனக் கூறி மேலும் சில நிமிடங்கள் உரையாற்றினேன். நான் நனையாதபடி குடை விரித்தனர் இளங்குன்னி உடன்பிறப்புகள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கூட்டம் முடிந்தபிறகு அங்கேயே ஒரு வீட்டில் இரவு உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது. மழைக்கு ஒதுங்கியிருந்த பொதுமக்களும் அங்கேயே சாப்பிட்டனர். சட்டமன்ற உறுப்பினர் கிரி கிராமத்தினர் பலரது பெயரையும் சொல்லி அழைத்து, நலன் விசாரித்ததுடன் அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டார்.

இளங்குன்னி கிராம மக்களிடம் மேடையில் உரையாற்றியதும், எம்.எல்.ஏ.வுடன் சேர்ந்து கிராமத்தினருடன் உரையாடியதும் நிறைவாக இருந்தது. அந்த வகையில் மழையும், திராவிட மாடல் அரசு போல நன்மை பயத்தது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.