கிராமப்புற பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்த செப்பர்டு சார்பில் காற்றாலை மின் உற்பத்தி அலகு !
திருச்சி மணிகண்ட ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம் விழா. செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றம் புது தில்லி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் வாயிலாக மரபு சாரா எரி சக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்க விழா நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கிராமபுற மக்களின் மேம்பாட்டிற்காகவும் உலகம் முழுவதும் அதிக எரி பொருள் பயன்பாட்டின் வழியாக கரிய அமில வாயு அளவு அதிகரிக்கிறது. இதனால் உலக வெப்பமயமாகுதலால் பாதிப்புக்குள்ளாகிறது. அதனை குறைப்பதற்கும் கிராமபுற பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்தி கொள்ளவும் சிறிய அளவில் காற்றாலை மின் உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் அதிபர் முனைவர் பவுல்ராஜ் மைக்கிள் தலைமை தாங்கி கற்றாலை மின் உற்பத்தியை தொடங்கி வைத்து அதை நாகமங்கல ஊராட்சி அலுவலகத்திற்கு அர்பணித்தார். செப்பர்டு விரிவாக்த்துறையின் இயக்குநர் முனைவர் சகாயராஜ் தொடக்கவுரையாற்றினார்.
முது நிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் உன்னத் பாரத் அபியான் பற்றி திட்ட விளக்கவுரையாற்றினார். இயற்பியல் பேராசிரியர் முனைவர் அலெக்சாண்டர் காற்றாலை பற்றி செயல் விளக்கம் அளித்தார். மேலும் அவர் எழுதிய காற்றாலையின் ஆற்றல் தொடக்கம் என்றகிற நூல் இந்நிகழ்ச்சியில் வெளியீடப்பட்டது.
மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஆரோக்கியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நாகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைசாமி வந்தவர்களை வரவேற்றார். முடிவில் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் நன்றி கூறினார்.
விரிவாக்கத்துறையின் முது நிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். யசோதை, ஜோசப் கிறிஸ்து ராஜா ஊர் தலைவர்கள் கல்லூரி மாணவர்கள் மகளிர் குழு மற்றும் இளைஞர்கள் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக இயற்கை சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் ஊராட்சி மன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன மேலும் இதற்கு முன்பு இனாம் மாத்தூர் அரசு பள்ளியில் காற்றாலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.