10-ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசு பேருந்து நடத்துனரின் மகள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டலத்தில் பணபுரியும் நடத்துனர் திரு.வெங்கடேசன் அவர்களின் மகள்    செல்வி. V. சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் நிர்வாக இயக்குனர் திரு.இரா.பொன்முடி அவர்கள், பொது மேலாளர் திரு.N.முத்துக்குமாரசாமி அவர்கள் பாராட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டலம் கும்பகோணம்-2 கிளையில் பணபுரியும் நடத்துனர் திரு.வெங்கடேசன் ப.எண்.08CR240 அவர்களின் மகள் செல்வி. V.சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்  பெற்றார்.

Srirangam MLA palaniyandi birthday

10-ம் வகுப்பில் முதலிடம்
10-ம் வகுப்பில் முதலிடம்

நிர்வாக இயக்குனர் திரு.இரா.பொன்முடி அவர்களின் வாழ்த்துக்கள் மற்றும் வழிக்காட்டுதலின்படி பொது மேலாளர் திரு.N.முத்துக்குமாரசாமி அவர்கள்  16-05-2025 மாணவி செல்வி.V.சோபியா அவர்களை நேரில் அழைத்து இனிப்புகள், பரிசு  வழங்கி  பொன்னாடை அணிவித்து  பாராட்டு தெரிவித்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மட்டும் அல்லாது மேல்நிலை வகுப்பிலும் உயர்கல்வியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு. போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களுக்கும் அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணத்திற்கும், பெற்றோர்களுக்கும், படிக்கின்ற பள்ளி, கல்லூரிகளுக்கும் பிறந்த ஊரான குறிச்சி கிராமத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பொது மேலாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் திரு.தங்கபாண்டியன், திரு.கார்த்திகேயன், உதவி மேலாளர்கள் திரு. கோபாலகிருஷ்ணன், திரு.குமார், திரு.சுரேஷ்பார்த்திபன், கிளை மேலாளர் திரு.சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர்கள் திரு.ராஜ்மோகன், திருமதி.மேரி, திரு.ஜெயக்குமார், திரு.காமராஜ் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

பொது மேலாளர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.