எங்கே போகிறது தமிழ் சினிமா..?
ராஜேந்தர் TR டாக்கீஸ் னு ஒரு யூட்யூப் சானல் ஆரம்பிச்சிருக்கார் போல. இன்ஸ்டாகிராம்லயும் அதோட ஃபாலோ அப்பா ரீல்ஸ் அப்லோட் பண்றார். கொஞ்சம் ஆர்வமா வரிசையா தள்ளி தள்ளி பார்த்தோம்.
எங்கே போகிறது தமிழ் சினிமா..? னு ஒரு டாபிக்.. புத்தாண்டுக்கு அவர் பாணில அடுக்குமொழில ஒரு வாழ்த்து சொல்லி ரீல்ஸ்.. அப்பறம் ஏதோ ட்ரெண்டிங் மேட்டருக்கு கருத்துனு அதுக்கு மேல நம்பளால பாக்க முடியல.
TR னா தன்னம்பிக்கை. தன்னம்பிக்கைனா T.R. இது தான் டி ராஜேந்தருடைய பிராண்ட். T R டாக்கீஸ் னு சானல் பாத்தோன நாம அவர்கிட்ட எதிர்பாத்து போனது அவர் ஜெயிச்சி வந்த அவருடைய சொந்த கதைகளை பத்தியும்.. அவரை ஜெயிக்க வைச்ச அவருடைய அந்த கால சினிமா கதைகளை.. காவிய வரிகளை கொண்ட ஹிட் பாடல்களை பத்தியும் Behind the scenes அவர் வாயாலேயே சுவையா சொல்லுவாருன்னு தான். மனுஷன் அதை புரிஞ்சிகிட்ட மாதிரி தெரியல.. ஏதேதோ தேவையில்லாத கருத்துலாம் பேசிட்டுருக்கார். சானல் / ரில்ஸ் வ்யூசே கூட கம்மியா தான் போயிட்டுருக்கு.
நமக்கெல்லாம் தெரிஞ்ச TRஐ 2Kயன்சுக்கும் தெரிய வைக்க இந்த TR டாக்கீஸ் அருமையான தளம். ஆனா அதுக்கு TR தான் மனசு வைக்கனும்.
— சதீஷ் குமார் சுப்பிரமணியம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.