கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகதில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரியி உதவி பேராசிரியர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகதில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரியி உதவி பேராசிரியர்

கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் ( Kodaikanal Solar Observatory) என்பது இந்திய வானியற்பியல் மையத்தித்தால் இயக்கப்படும் ஆய்வகம் ஆகும். தென்னிந்தியாவிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. 1881 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியாவின் வானிலை ஆய்வுச் செய்தியாளர் பிலான்போர்டு சூரிய ஆய்வுக்கான விதையை விதைத்தார். “பூமியின் மீதான சூரிய வெப்ப சக்தியினை துல்லியமாக அளவிடுவது, குறிப்பிட்ட காலத்திற்கான அதன் வேறுபாடுகள் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக மேம்பட்ட சூரிய கண்காணிப்பு முறைகள் முதலிய முன்னேற்ற நடவடிக்கைகளை இவர் பரிந்துரைத்தார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

Training in Solar Space Laboratory
Training in Solar Space Laboratory

20 அங்குல தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட சூரியன், விண்மீன்களின் புகைப்படங்கள், அவற்றின் கதிர்நிரல் வரைபடங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவமும் அவை குறிப்பாக தென்னிந்தியாவின் மலை வாழிடத்தில் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் 1882, மே மாதத்தில் நார்மன் இராபர்ட்டு போக்சான் மதராசில் முன்மொழிந்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

1893 ஆம் ஆண்டு மதராசு மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை தொடர்ந்து, சூரியனைப் பற்றிய புரிதல்களை அதிர்கரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. தென்னிந்தியாவின் மிக உயரமான, தூசு குறைந்த கொடைக்கானலில் ஒரு சூரிய இயற்பியல் வான் ஆய்வகத்தை நிறுவிட இலார்டு கெல்வின் முடிவு செய்தார். மிச்சி சிமித் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 1895 இல் பணிகள் துரிதமாக நடந்தன. மதராசு வான் ஆய்வகத்திலிருந்த கருவிகள் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இல் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் நிறுவப்பட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Training in Solar Space Laboratory
Training in Solar Space Laboratory

1909 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்குதான் முதன்முதலில் எவர்செட்டு விளைவு கண்டறியப்பட்டது. இந்த ஆய்வகத்தில் திரட்டப்பட்ட சூரிய தரவுகள் உலகில் கிடைக்கப்பெறும் மிகப்பழமையான தொடர் வரிசைத் தரவுகளாக 120 ஆண்டுகளுக்கு மேல் பராமரிகப்படுகிறது. பூமத்திய செறிவு, மின்னோட்டம் தொடர்பாக இங்குத் திரட்டப்படும் துல்லியமான தரவுகள் தனித்துவம் மிக்கவையாகும். அயன மண்டல ஆழம் காணல், புவிகாந்தம், சூரிய கரும்புள்ளி நகர்வு, சூரியனின் மேற்பரப்பு ஆய்வுகள் போன்றவை இங்கு வழக்கமாக நடைபெற்று வருகின்றன. இங்கு திரட்டப்படும் தரவுகளின் தொகுப்புகள் தேசியத் தரவு மையம் மற்றும் உலாகாயத் தரவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வைணு பாப்பு 1960ல் இங்கு இயக்குநராகப் பதவியேற்றார். நவீன கதிர் நிரல் வரைபட வசதிகள் கொண்ட 12 மீ சூரிய கோபுரம் ஏ.கே. தாசுவால் 1960 இல் இங்கு நிறுவப்பட்டு சூரியமைய்ய நிலஅதிர்ச்சியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தப்புல வரைபட ஆய்வுமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 1977 இல் இங்கிருந்த வானியல் அறிஞர்கள் பலர் பெங்களூருக்கு மாற்றப்பட்டு அங்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தைத் தொடங்கினர்.

Training in Solar Space Laboratory
Training in Solar Space Laboratory

கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம், இந்திய வான் இயற்பியல் மையம் மற்றும் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் இணைந்து மூன்று நாள் (30.09.23 முதல் 02.10.23 வரை) மாநில அளவிலான பயற்சி நடத்தியது. இதில் நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் பங்கு பெற்று அங்கு நடைபெறும் ஆராய்ச்சி பற்றி நேரடியாக தெரிந்து கொண்டார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.