திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

0

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் திருநங்கைகள் இச்சமூகத்தில்  அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15ம்  தேதியன்று திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது வழங்கப்படும்.

முன் மாதிரி விருது
முன் மாதிரி விருது

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இவ்விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்றும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருப்பவராகவும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும், திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது என்ற விதிமுறைகளை கொண்டு விருதுபெற  awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக கீழ்க்காணும் விபரப்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கையேட்டில் இணைக்கப்படவேண்டியவை:

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயர்தரவு (Bio Data) மற்றும் Pass Port size Photos -2, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரை கடிதம், மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரை கடிதம், சுயசரிதை, தனியரை பற்றிய விபரம் (ஒரு பக்க அளவில்) Soft Copy and Hard Copy, விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விபரம்/விருதின்பெயர்/யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூகசேவையாளரின் / சமூகசேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள்  பயனடைந்த விவரம், சமூகபணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு – படிவம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) முழுமையாக பூர்த்தி செய்து (Soft Copy and Hard Copy)  அனுப்பப்பட வேண்டும், கையேடு (Booklet) -தமிழில் அச்சு (Print) செய்யப்பட்டுதலா 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:10.02.2025, மேலும் விபரங்கள் பெற அலுவலக தொலைபேசி எண்: 0431 -2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.