மாட்டு மூத்திரத்தைவிட , மனிதர்கள் மூத்திரம் சிறந்தது? பெரும் சர்ச்சையை கிளப்பிய அதிமுக தலைமை நிர்வாகி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாட்டுச் சாணியை தின்னு  அதன் மூத்திரத்தை குடி. அதனால் 108 நோய்கள் தீரும் என்று பாஜகவினர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள் அவ்வபோது மூத்திர அரசியலை பேசி  சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில்,  அவர்களையெல்லாம் ஒவர் டெக் செய்து நம்ம  மூத்திரத்தை நாமே குடிக்கலாங்க  என்று அதிமுக தலைமை நிர்வாகி ஒருவர் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் , மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைப்பெற்றது.  கூட்டத்தில் கலந்துகொண்ட”அதிமுக  துணை பொதுச்செயலாளரும் , முன்னாள் அமைச்சரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி , அடுத்தாண்டு நடைப்பெற உள்ள 2026  சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவரிடம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டது!

ஒன்று , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியதை  கேட்டனர்,

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

பெரியாரை விமர்சிக்க சீமானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை , பெரியார் குறித்து விமர்சிப்பதற்கே பெரியார்தான் காரணம். எங்களை போல் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்னேறவும், இன்று பேசவும் பெரியாரே காரணம்.

ஒரு சமூகத்தினரிடம் இருந்த அதிகாரத்தையும்  மூடநம்பிக்கையை மக்களிடம் பேசி பெரியார் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் . 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐஐடி இயக்குநர் காமக்கோடி

ஐஐடி இயக்குநர் காமக்கோடி

மற்றொரு கேள்வியான  சென்னை ஐஐடி இயக்குனர்,  மாட்டின் மூத்திரத்தை அருந்த வேண்டும் என்கிறார் என்பதை  குறித்து, கேள்வி கேட்டபோது,

பட்டென்று , அது அவரின் தனிப்பட்ட கருத்து  மொரார்ஜி தேசாய் உங்களுக்கு தெரியுமா ? அவர் நாட்டின் பிரதமராக இருந்தவர் , அவர் எதை குடித்தார் என்று தெரியுமா ? வரலாற்றை பற்றி தெரிந்திருந்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்கமாட்டிற்கள் , என எரிச்சலுடன் எதிர் கேள்வி கேட்டு அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

மொரார்ஜி தேசாய் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் தங்களது மூத்திரத்தை தாங்களே விடிகாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்தனர் என்பதாகவும் , 1977-79 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தத முராஜி தேசாய் அந்த காலகட்டத்தில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும் அங்குள்ள புகழ்பெற்ற BEC , வாராந்திர செய்தி ” இதழுக்கு சுமார் 60 நிமிடங்கள் வரை பேட்டி அளித்தார்  அப்போது  ,  82- வது வயதிலும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியம்  கூற முடியுமா என  செய்தியாளர் டான் ராதர் கேட்டதற்கு?

என்னுடைய உணவில் எப்போதும் பழம், காய்கறி ஜூஸ், பால், தயிர், தேன், ப்ரஸ் பழங்கள், நட்ஸ் மற்றும் 5 கிராம்பு, பூண்டு இருக்கும் என கூறியவர், “நான் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து முதல் எட்டு அவுன்ஸ் சிறுநீர் குடிப்பேன்,” என்று  கூறியுள்ளார்.

என்னது, உங்கள் சிறுநீரை குடிக்கிறீர்களா? இதை நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் சங்கடமான ஒரு விஷயம்,என்றார்  டான் தொடர்ந்து பேசிய “தேசாய்  “சிறுநீர் குடிப்பதை” “இயற்கை சிகிச்சை” என விவரித்திருந்தார்  .

மொரார்ஜி தேசாய் இப்படி வெளிப்படையாக பேசி இருந்தது, இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஊடகங்களில் கேலிக்குரிய பேசுபொருளாக மாறி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார் என்ற ஒரு தகவல் உண்டு.

அந்த வகையில், ஐஐடி இயக்குநர் காமக்கோடி பேசிய மாட்டு மூத்திரம் சர்ச்சையை விட, ஒரு படி மேலே சென்று நாட்டின் முன்னாள் பிரதமரே அவரது சிறுநீரை குடித்தார் அதனால் அதைவிட  மனிதர்கள் மூத்திரம் சிறந்தது என்பது போல பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் அதிமுக தலைமை நிர்வாகிகளில் ஒருவருமான கேபி முனிசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம்  கல்வியறிவில் மிகவும் பின் தங்கியப்பகுதி  இவரது பதிலால்  சிறுநீர், மருத்துவ சிறப்புத்தன்மை மிக்கது  மனித சிறுநீரில் மருத்துவ குணம் இருக்கலாம் என கருதி, அதை பொதுமக்கள் பயன்படுத்த முயற்சிகள் செய்ய மாட்டார்காளா ?

பாஜகவோடு  கள்ளக் கூட்டணியில் இருக்கும் அதிமுக அதன் நிர்வாகிகளில் ஒருவருமான கேபி முனிசாமி , மாட்டு மூத்திரம் என்னங்க மாட்டு மூத்திரம் மனிதர்கள் மூத்தரமே குடிக்கலாம் என்று கூறுவது போல் பேசியது  ஆச்சரியமில்லை,  ஆனால்  அவரது  பேச்சு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற “மூத்திரங்களை  “குடி ‘என்று சொல்பவர்கள் பொது வெளியில் ” முதலில் அவர்கள் குடித்துவிட்டு பின்னர் பேசுவார்களா?  என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுகுறித்து  திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளரும்  மருத்துவருமான “டாக்டர் தருண்”அவர்களிடம் கேட்டேம்

நான் மருத்துவர் என்ற முறையில் மட்டுமே பதில் அளிக்கிறேன் என்றவர்  மாட்டு கோமியத்தில் பல்வேறு பாக்டீரியாக்கள் உள்ளதால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது போன்ற துல்லியமற்ற தகவல்களை பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், மக்களின் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.

டாக்டர் தருண்
டாக்டர் தருண்

மருத்துவ துறையில் மாட்டு சிறுநீர் மற்றும் மனிதனின் சிறுநீர் குறித்து குடிப்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை ,  மொரார்ஜி தேசாய் அவரது சிறுநீரை குடித்தாரா என்பது தெரியாது , அது கட்டுக்கதையாக கூட இருக்கலாம், தற்போது மாட்டு சிறுநீரையாவது குடியுங்கள் என்பதை பாஜக நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்கள் கூறி வருவதை நிறுத்த வேண்டும் அப்படி கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

 

—  மணிகண்டன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.