குளித்தலையில் – பகலில் மூட்டை மூட்டையாக மணல் கடத்தல்.
குளித்தலையில் கடம்பன் துறை காவிரி ஆற்றில் பட்ட பகலில் மூட்டை மூட்டையாக மணல் கடத்தல். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை.
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் இரவில் மட்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட வந்த மணல் கடத்தல் கும்பல்கள், கடந்த 10 நாட்களாக காவிரியில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் சென்றதால், ஓய்வில் இருந்தனர்.
தற்போது காவிரியில் படிப்படியாக தண்ணீர் குறைந்து தற்போது 10 ஆயிரத்திற்கும் குறைவான தண்ணீர் மட்டுமே செல்வதால், மீண்டும் மணல் கொள்ளையில் கொள்ளையர்கள் ஈடுபட துவங்கி விட்டனர்.
இரவில் மட்டுமே மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள், தற்போது பகலிலும் மூட்டை மூட்டையாக கட்டி லாரி, வேன் மூலம் கடத்தி வருகின்றனர். அப்படி கடத்தபட்டதன் ஒரு பகுதி தான் இந்த காட்சி.
எனவே காவிரி மணலை திருடி விற்கும் நபர்கள் மீது காவல்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு குழு அமைத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- – நௌஷாத்