வக்பு வாரியச் சட்டத் திருத்த மசோதா – திருமாவளவன் கடும் எதிர்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வக்பு வாரியச் சட்டத் திருத்த மசோதா : திருமாவளவன் கடும் எதிர்ப்பு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காகக் கடந்த 1995ஆம் ஆண்டு வக்பு வாரியச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில்தான் பல முக்கியத் திருத்தங்களைப் பாஜக தலைமையிலான மத்திய அரசு சட்டத் திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமியப் பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்படப் பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இச் சட்டத்தை முன்மொழிந்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்போது,“வக்பு வாரியச் சொத்துகள் தற்போது மாஃபியாக்களின் பிடியில் உள்ளது. அவை மீட்கப்பட வக்பு வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பல எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்தான் அவையில் இந்தச் சட்ட மசோதாவை எதிர்க்கிறார்கள்” என்று கூறியவர், எந்தக் கட்சி உறுப்பினர்கள் என்பதை இறுதிவரை கூறவில்லை. இந்தச் சட்டம் இஸ்லாமியர்களின் மீது அரசுக்கு இருக்கும் வெறுப்பையே வெளிப்படுத்துகின்றது.

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கோயில்கள் கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்களால் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பாஜக வக்பு வாரியத்தில் எல்லா மதம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுப்பினர்களாக இருப்பதை ஏற்கமுடியாது” என்று எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

குறிப்பாக ஒரு சொத்து வக்பு வாரியச் சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாகத் தற்போதைய சட்டப் பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தைத் திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது. வக்பு வாரியச் சொத்துகளுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாரியத்தில் உள்ள அனைத்துச் சொத்துகளையும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரியச் தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளது. இப்படிப் பல திருத்தங்கள் வக்பு வாரியத்திற்கு எதிராக, சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய திருமாவளவன், “அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடிய வகையில், மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்திய உணர்வுடன் வாழுகிற இஸ்லாமியர்களை அன்னியர்களைப் போல மாற்றுகிற முயற்சி வேதனை அளிக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தில் தலையிடுவது என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற அனைத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளை எல்லாம் தட்டி பறிக்கிற வகையில் வேண்டும் என்றே திட்டமிட்டு இதில் அரசு தலையிடுகிறது. வக்பு போர்டு நீண்ட நெடுங்காலமாகத் தனித்து இயங்கி வருவதை நாம் அறிவோம். ஒவ்வொரு மதத்துக்கும் எனச் சுதந்திரம் இருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற அனைத்துச் சுதந்திரம் மற்றும் உரிமைகளை எல்லாம் தட்டி பறிக்கிற வகையில் வேண்டும் என்றே திட்டமிட்டு இதில் அரசு தலையிடுகிறது. வக்பு போர்டு நீண்ட நெடுங்காலமாகத் தனித்து இயங்கி வருவதை நாம் அறிவோம். ஒவ்வொரு மதத்துக்கும் எனச் சுதந்திரம் இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்துத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய திருமாவளவன், “இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில், வக்பு வாரியச் சட்டத் திருத்த மசோதாவும் ஒன்று. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குரலை எழுப்பியதன் விளைவாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார்.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில்தான் வக்பு வாரிய மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவைத் தெலுங்குதேசம், நிதீஷ் கட்சியும் ஆதரித்தன. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் மசோதா நிறைவேறுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

-ஆதவன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.