சிக்கிய “மக்கள் பிச்சை”.. சிக்காத அதிகாரிகள் கரூர் களேபரம்
நீங்க கேட்ட பணத்தை அவர்கிட்ட கொடுத்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது என வெள்ளந்தியாக ஒருவர் சொல்ல அதிர்ந்து போனார்கள் குளித்தலை போலீஸார்..
அந்த நபரை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரித்தார் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் இயங்கிவரும் தனியார் வங்கியில் கடந்த ஆண்டு குளித்தலை வீரவல்லி பகுதியைச் சேர்ந்த பெண் மணிவர்சா சுமார் 40 பவுன் தங்க நகையை அடமானம் வைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அடகுவைத்த நகையை மீட்க மணிவர்சா சென்று வங்கியில் கேட்டபோது வங்கி பணியாளர்களுக்கும் அந்த பெண்ணின் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகளப்பானது. கையில் கிடைத்த பொருட்கள் வீசி தங்களை தாக்கியதாக வங்கித்தரப்பு குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது நடந்து சில தினங்கள் ஆன நிலையில் கடந்த 25.11.2025 அன்று காலை மணிவர்சா முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு கொடுக்கவே,
தனியார் வங்கி மேலாளர் சிவா, குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரனின் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆனார்.
வங்கி மேலாளர் சிவாவிடம் காவல் ஆய்வாளர் உரிய ஆவணங்களை கேட்டுள்ளார்.
அப்போதுதான் எதார்த்தமாக அந்த மேலாளர், நீங்க கேட்ட 40 ஆயிரத்தை கொடுத்துட்டேன்ல சார். இதுக்கும் மேல என்னால பணம் தரமுடியாது. நாங்கள் கொடுத்த கேஸ்ல நடவடிக்கை எடுங்க சார் என பேச்சுவாக்கில் சொல்ல ஆய்வாளர் கருணாகரன் அதிர்ந்து போனார்.
விசாரித்ததில், பிச்சை முத்து தன்னிடம், இன்ஸ்பெக்டர் கருணாகரன் உங்க வழக்கில் நடவடிக்கை எடுக்கனும்னா 40 ஆயிரம் பணம் கொடுத்தால் உடனே நடவடிக்கைகள் எடுப்பாரு, அதனால் இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கனும்னு நம்பும்படி பேசி என்னிடம் பணத்தை வாங்கினார் எனச் சொல்ல்…
போலீஸாரையே என் பெயரைச் சொல்லி பணம் வாங்கக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டிருக்கேன் என கடுப்பான காவல் ஆய்வாளர் கருணாகரன், அந்த மக்கள் பிச்சை யை வரச் சொல்லுங்க என மேலாளர் மூலமே வர வைத்து விசாரித்தார்..
போலீஸ் தனது பாணியில் விசாரணை செய்ய, ஆரம்பத்தில் நான் பணமே வாங்கவில்லை என சொன்ன பிச்சை, பின்னர், மெல்ல 10ஆயிரம் வாங்கினேன், என்னைப்போல் அவரிடம் இரண்டு போலீஸாரும் பணம் வாங்கியதாக கூறினாராம்.
போலீசார் விசாரணையில், பிச்சை முத்து மீது ஏராளமான அடிதடி வழக்குகள், கொலைமுயற்சி வழக்குகள் இருப்பதும், இன்ஸ்பெக்டர் சாட்டையடி சக்திவேல் என்பவருக்கு பணம் வாங்கி தந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதும், குளித்தலை, அய்யர்மலை, தோகமலை, லாலாப்பேட்டை, பெட்டவாய்தலை, நங்கவரம் பகுதிகளில் ஏஜெண்ட்கள் வைத்து பஞ்சாயத்து, காவல்நிலையங்கள், குளித்தலை தாசில்தார் , ஆர்.டி.ஓ உள்ளிட்ட அத்தனை அலுவலகங்களிலும் பிச்சைமுத்து ஒரு கேங் வார் நடத்தி அதிகாரிகள் பெயரை சொல்லி பொதுமக்களிடம் பணம் வசூல் வேட்டை நடத்துவதும், காவல்நிலையம் அருகில் செயல்பட்டுவரும் அந்த தனியார் வங்கியில் நகை அடகு வைத்த பெண்ணிடமும் பிச்சை முத்து பேரம் பேசியதும், அவருக்கு கரூர் குளித்தலை திமுக முக்கியப்புள்ளிகள் மிக நெருக்கம் என தெரியவரவே அதிர்த்து போன ஆய்வாளர் கருணாகரன், போலீஸ் பேரை சொல்லி பணம் வசூலிப்பதா என அடங்காத கோவத்தில் வசமாக சிக்கிய மக்கள் பிச்சைமுத்து மீது,
வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக வங்கி மேலாளர் சிவா கொடுத்த புகாரில் வழக்குபதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார்.
பிச்சைமுத்து கைது விவகாரம் இப்போது குளித்தலை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே பிச்சைமுத்து, மேலும் ஒரு பெண்ணிடம் நகையை ஏமாற்றிவிட்டார் என குளித்தலை ஸ்டேசனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வருடக்கணக்கில் குளித்தலை காவல்நிலைய வாசலில் காத்து கிடந்த அந்த பெண் சந்தர்ப்பம் பார்த்து காவல் உயரதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறாராம். அதோடு, தாசில்தார், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பிச்சமுத்து வசூல் நடத்தியதாக புகார் குவிந்து வருகிறதாம்..

இதுகுறித்து பிச்சைமுத்து தரப்போ, அந்த தனியார் வங்கி அடகுவைத்த நகைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்துவிட்டது. அந்த விவகாரம் மக்கள் பிச்சையிடம் வரவே தலையிட்டு நியாயம் கேட்க போனவர், அவர் செலவுக்காக 10 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் கொலைமிரட்டல் எல்லாம் விடவில்லை என்றாராம்.
இந்த விவகாரம் குறித்து பேசியவர்கள் பெயர் வேண்டாம் என்றபடி,
மக்கள் பிச்சை மட்டும் தவறு செய்ததாக சித்தரிக்கிறார்கள்.
அவர் மட்டும் குற்றவாளியில்லை. மக்கள் பிச்சை போன்ற மீடியேட்டர்கள் முதல்முதலில் வரும்போதே விரட்டியடித்திருந்தால் மக்கள் பிச்சை இவ்வளவு வளர்ந்திருக்க மாட்டார்.
பிச்சை மட்டுமல்ல குளித்தலை வட்டாரத்தில் உள்ள காவல்நிலையங்களில் புரோக்கர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்கள் அந்தந்த ஸ்டேசன் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி தங்களுக்கு நெருக்கம் என வசூல் கட்டுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பதிலளிக்க முன்வருவதில்லை. பிச்சைமுத்து எதார்த்தமாக மேலாளர் சொன்னதால் சிக்கிக்கொண்டார் சிக்காத தரகர்கள் பந்தாவாக வலம் வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் குளித்தலையில் முக்கிய தமிழ்க்கடவுள் பெயர் கொண்ட அந்த காவல் உயர் அதிகாரி, அவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால், அவரது கீழ் உள்ள காவல்நிலையங்களில்
சாமி பெயர் கொண்ட காவலர்களை தனக்கு தனி வசூல் செய்ய நியமித்துள்ளார்.
அவருக்கு முக்கிய அமைச்சர் நெருக்கம் என்பதால் அவர் வசூல் போலீஸாருக்கு முழு சுதந்திரம் தரவே, அவர்களோ அந்த முக்கிய அதிகாரி பெயரை சொல்லிக்கொண்டு அடாவடி வசூல் செய்கிறார்கள். வார வசூல், மாத வசூல் பெயரில் கடவுள் பெயர் கொண்ட போலீஸார் மாதம் லட்சங்களில் வாழ்கிறார்கள்.
சமீபமாக “வசூல்” போலீஸார் மீது எஸ்.பி நடவடிக்கைகள் எடுத்தாலும், சில வாரங்களிலேயே அந்த. பலம் வாய்ந்த உயரதிகாரி, வசூல் போலீஸார் தனக்கு வேண்டும் என கேட்டு வாங்கி தனக்கு கீழ் வைத்துள்ளார்..
இதனால் குளித்தலை உயரதிகாரி கண்ணசைவில் வில்லங்க போலீஸார் பந்தா காட்டுகிறார்கள். இந்த காவல் நிலையங்களில் பசையில்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை.
அதைவிட நகை திருட்டு சம்பவங்கள் மட்டும் நடந்திட கூடாது. நடந்தால் வேலாயுதம் பெயர் கொண்ட கிரைம் அதிகாரி ஒருவர் குற்றவாளிகளை பிக்ஸ் பண்னுவதில் இருந்தே டீலிங் பேசி கல்லாக்கட்டிவிடுகிறார். மேலும் திருடர்களிடம் கைப்பற்றிய நகைகளில் இவர்கள் கைவரிசை பட்டியல் நீள்கிறது. அந்த முருக அதிகாரி கடந்த சில வருடங்களுக்கு முன் டெல்டா மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார் . ஆனாலும் செல்வாக்கில் மீண்டும் அதே இடத்தில் அதே வேலையை செய்கிறார்..
இவர்களுக்கு மத்தியிலும் காவல் ஆய்வாளர் கருணாகரன் மக்கள் பிச்சையை கைது செய்திருப்பது பாராட்டுதலுக்குறியது.
இவரைப் போல் எல்லோரும் இருந்தால் குளித்தலை சுற்றுவட்டார காவல்நிலையங்களில் அதிகாரிகள் மாறினால் நிம்மதி.
திருத்துவது யார்?.








Comments are closed, but trackbacks and pingbacks are open.