அங்குசம் பார்வையில் ‘டிரெண்டிங்’ 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘ராம் பிலிம் ஃபேக்டரி’ ஜி.ஆனந்த் & மீனாட்சி ஆனந்த். டைரக்‌ஷன் : சிவராஜ், ஆர்ட்டிஸ்ட் : கலையரசன், பிரியாலயா, பிரேம், பெசண்ட் ரவி, வித்யா போர்ஜியா, ஷிவான்யா. ஒளிப்பதிவு: பிரவீன் பாலு, இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : நாகூரான் ராமச்சந்திரன், ஆர்ட் டைரக்டர் : அருண்குமார், காஸ்ட்யூம் டிசைனர் : பிரியா கலையரசன், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம் ]

தற்போதைய உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை நெருங்கிவிட்டது. 800 கோடியில் கிட்டத்தட்ட 700 கோடி பேரும், இந்தியாவை மட்டும் கணக்கில் கொண்டால் 150 கோடி பேரில் 145 கோடி பேர் யூடியூப் கண்டெண்டுகளுக்காகவும் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்காகவும் பலவகைகளிலும் உழைத்து பைத்தியமாகிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக யூடியூப் சில்வர் பட்டனுக்காவும் கோல்டு பட்டனுக்காகவும் அதன் மூலம் கொட்டும் பணத்திற்காவும் ரொம்பவே எல்லை மீறிப்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

‘டிரெண்டிங்’பல இளஞ்ஜோடிகள், நடுத்தர வயது தம்பதிகள் படுக்கையறை உடலுறவுக் காட்சிகளைத் தவிர மற்ற எல்லா கண்றாவிகளையும் யூடியூப்பில் அப்லோட் பண்ணுவதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராகிவிட்டார்கள். கேட்டால் “நாங்க தான் டிரெண்டிங்கில் நம்பர்-1” என்ற பெருமை மசுரு வேறு. இப்படியாப்பட்ட எல்லை மீறிய பணவெறியும் சோஷியல் மீடியாவில் தெரியும் முக வெறியும் பல பெண்களை, பல குடும்பங்களை முகவரி தெரியாமல் ஆக்கிக் கொண்டிருக்கும் ஆபத்தும் ஆரம்பமாகிவிட்டது.

அப்படிப்பட்ட ஆபத்தை செவுட்ல  அறைந்த மாதிரி சொல்வது தான் இந்த ‘டிரெண்டிங்’.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அர்ஜுன் –மீரா என்ற பெயரில் சோஷியல் மீடியாவில் இருக்கிறார்கள் கலையரசன் –பிரியாலயா தம்பதிகள். பொழுது விடிந்து பொழுதடையும் வரை ஏதாவது ஒரு கண்டெண்டை யூடியூப்பில் அப்லோட் பண்ணுவது தான் இவர்களுக்கு வேலையே. மிகவிரைவிலேயே 1 லட்சம் சப்ஸ்கிரைபர் வந்துவிட, அதை 5 லட்சமாக்குவதற்காக ஐடியா பண்ணுகிறார்கள் கலையரசனும் பிரியாலயாவும்.

வீட்டில் ஒரு வாரம் தொடர்ந்து சண்டை நடப்பது போலவும் அதைத் தொடர்ந்து டைவர்ஸ் பண்ணப்போவதாகவும் வீடியோ போட்டால் நாம தான் டிரெண்டிங் என்ற ஐடியாவை இருவரும் யோசிக்கும் போது தான் மாஸ்க் அணிந்த ஆசாமி ஒருவன் டாஸ்க் என்ற பெயரில் இவர்களின் வாழ்க்கைக்குள் வருகிறான். நான்கு டாஸ்க், 2 கோடி பரிசு என தூண்டில் போடுகிறான் அந்த மாஸ்க். கடன் சுமை தீர ஓகே சொல்கிறார்கள் கலையும் பிரியாவும்.

‘டிரெண்டிங்’அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஏடாகூடங்களும் ஆபத்துகளும் தான் இந்த ’டிரெண்டிங்’.

Flats in Trichy for Sale

படத்தில் கலையரசன் & பிரியாலயா என இருவர் மட்டும் தான் முக்கால்வாசிக்கும் மேலான சீன்களில் இருக்கிறார்கள். மற்றபடி மாஸ்க் வில்லனாக ஒருவர்,  கந்துவட்டி பார்ட்டியாக பெசண்ட் ரவி, கலையரசனின் உறவினராக பிரேம், பிரியாலயாவின் அம்மாவாக ஒருவர் [ ஒரு சீன் மட்டும் தான்]. கதைக்களம் மொத்தமும் ஒரு பங்களாவில் தான். இப்படி மிகக்குறைவான கேரக்டர்கள், ஒரே ஒரு லொக்கேஷன் இதை வைத்துக் கொண்டு, லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்தபடி நச்சுன்னு ஒரு கண்டெண்டைப் பிடித்து, பார்வையாளர்களை ‘கேட்ச்’ பண்ணியுள்ளார் டைரக்டர் சிவராஜ்.

ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும் நமக்கு  சில நேரங்களில் அலுப்புத் தட்டினாலும் நடுத்தர வர்க்கத்திற்கு பணத்தாசையைத் தூண்டி சீட்டிங் கேமில் சிக்குவதை  கலையரசனும் பிரியாலயாவும் தங்களின் நடிப்பால் அலுப்பைப் போக்குகிறார்கள். இவருக்குத் தெரியாமல் அவரும் அவருக்குத் தெரியாமல் இவரும் டாஸ்கில் சிக்குவது, பின் அதை நினைத்து கதறுவது என இருவருமே வெல்டன்.

அதிலும் பிரேம் வீட்டுக்குள் வந்த பிறகு எதிர்பாராத ட்விஸ்டுகளும் ஸ்கிரிப்ட்டுக்குள் வந்து சுவாரஸ்யப்படுத்துகிறது. தனது மனைவியையே பிரேமிடம் ’அனுப்ப’ வேண்டிய [ உண்மையில் இது போல எத்தனை அயோக்கியர்கள் இருக்கிறார்களோ ] டாஸ்க் கட்டாயத்தில் சிக்கிய பின் கலையரசனின் நடிப்பு அபாரம். அதே போல் பிரியாலயாவும் சும்மா வெளுத்துக்கட்டியுள்ளார். பாத்டப்பில் அமுக்கி தன்னைக் கொல்லப்பார்க்கும் கலையரசனின் சுயரூபத்தை நினைத்து ஆக்ரோசமாகி, “அடச்சீ… நீயெல்லாம் ஒரு ஆம்பளயா? பிரேமிடம் என்னை அனுப்பிய போதே உன்னோட யோக்கியதை தெரிஞ்சு போச்சுடா” என கண்ணீர் உகுக்கும் காட்சியில் கலங்க வைத்துவிட்டார் பிரியாலயா.

‘டிரெண்டிங்’பரவாயில்ல… இப்ப சினிமாவுக்கு வரும் இளம் ஹீரோயின்களெல்லாம் தங்களுடைய சதையை மட்டும்  நம்பாமல், நல்ல கதையையும் தங்களின் நடிப்புத் திறமையையும் நம்பி வருவது ஆறுதலாக இருக்கு. இந்த டிரெண்டிங்கிற்கு சூப்பர் சப்போர்ட்டர்னா அது மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ் தான். மாஸ்க் மனிதன் ஸ்கிரிப்ட்டுக்குள் எண்ட்ரியான பின், அவனிடம் கலை-பிரியா தம்பதிகள் மாட்டிக் கொண்ட பின் பல்வேறு சீன்களில் செமத்தியான பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணி ஜமாய்த்துவிட்டார் சாம் சி.எஸ்.

“அய்யய்யோ இந்த யூடியூப்பை குளோஸ் பண்ணிட்டான்னா, நாமெல்லாம் உழைச்சு தான் சம்பாரிக்கணுமா?”

‘பயப்படாத அவன் பொழப்பே அதுல தான் ஓடிக்கிட்டிருக்கு. அதனால நம்மள வேலைபார்த்து சம்பாரிக்கவிடமாட்டான்” இந்த வசனங்கள் தான் இன்றைய டிஜிட்டல் உலக டிரெண்ட்.

 

  —   மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.