அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தென்னக ரயில்வேயில் நடைபெற்ற அங்கீகார சங்க தேர்தலில் வெற்றி பெற்ற டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்திற்கு, கூடுதலான எண்ணிக்கையில் கிளைகளை வழங்க வேண்டும். மத்திய அரசு 8-வது ஊதியக்குழு சமர்ப்பிப்பை விரைவுபடுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் பெற்று வந்த ‘மேனுவல் பேப்பர் பாஸ்’ முறையை ரத்து செய்துவிட்டு, ‘இ-பாஸ்’ ஆக மாற்றம் செய்ததை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டி.ஆர்.இ.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
​இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் ஏ. அருண்குமார் செழியன், கோட்டச் செயலாளர் ஆர். கரிகாலன், துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ். ராஜா, பி. கே. மாதவன், ஆர். சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர்.
​ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ. அமைப்பைச் சேர்ந்த பி. கண்ணையன் நன்றி கூறினார். இதில் திரளான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.