திருச்சியில் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் – தங்கம், பரிசு என கலக்கிய அதிமுகவினர்
MGRரின் ரசிகர்கள் இப்போதும் திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் படங்கள் வெளியானால் கூட்டமாக படத்திற்கு வந்து கொண்டாடுவார்கள்.
அதே நேரத்தில் திருச்சி அதிமுகவினர் எம்.ஜிஆர் படத்தை திரையிட்டு தங்கம், பணம், பரிசு பொருட்கள் கொடுத்து கலக்கி இருக்கிறார்கள்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்.. திருச்சி பேலஸ் தியேட்டரில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது.
இன்று முழுவதும் MGR ரசிகர்களுக்கு இலவச காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக மாலை காட்சியை காண்பதற்கு வந்திருந்த ரசிகர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ஒருவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் இரண்டாம் பரிசாக ரூபாய் 1000/- மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சில்வர் குடங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Ex.MP வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தில்லைநகர் பகுதி கழக செயலாளர் MRR.முஸ்தபா மற்றும் காந்தி மார்கெட் பகுதி கழக செயலாளர் D.சுரேஷ் குப்தா ஆகியோர் மேற்கொண்டனர்.
மேலும் பரிசுகளை கழக அமைப்புச் செயலாளர் T.ரத்தினவேல் Ex.MP மற்றும் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ.சீனிவாசன் , மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் L.முத்துக்குமார் மற்றும் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் M.A.அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.







