இந்துக்களை பாதுகாக்கும் கட்சி திமுக : அமைச்சர் சேகர் பாபு

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

இந்துக்களை பாதுகாக்கும்
கட்சி திமுக : அமைச்சர் சேகர் பாபு

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்றும், இந்துக்களை பாதுகாக்கும், அரவணைக்கும் கட்சி என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோயிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, கடந்த இரண்டு ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகக் கூறினார்.

5

“அனுபாவி சுப்பிரமணியர் கோயிலில் ரோப் கார் வசதி அமைக்க சாத்தியக்கூறு உள்ளது. ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை பெற்றவுடன் ரோப் கார் வசதி அமைக்கும் பணி நடைபெறும்,” என்றார் அமைச்சர் சேகர் பாபு.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

பேரூர் கோயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் விரைவில் அறங்காவலர் குழு அமைக்கப்படும் என்றார் அமைச்சர்.

ஆட்சியாளர்களை ஆதீனங்கள் தேடிச் சென்ற காலம் போய், இப்போது ஆதீனங்களை ஆட்சியாளர்கள் தேடி வருகின்றோம் எனக் கூறிய அமைச்சர், “திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. இந்துக்களை பாதுகாக்கும், அரவணைக்கும் கட்சி,” என்றார் அமைச்சர் சேகர் பாபு.

6
Leave A Reply

Your email address will not be published.